E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

உலகின் முதல் விமானியில்லா போர் விமானம் “தரானிஸ்”

கண்டம் விட்டு கண்டம் சென்று எதிரி இலக்குகளை மிகச் சரியாகத் தாக்கும்,  எதிரி நாட்டு போர் விமானங்களை வழியில் மறித்துத் தாக்கும் திறன் கொண்ட உலகின் முதல் விமானியில்லா போர் விமானத்தை பிரிட்டன் தயாரித்துள்ளது.

உகண்டா குண்டு வெடிப்பில் இலங்கை தமிழர் பலி

உகண்டா,  கம்பாலவில் கடந்த‌ ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டு வெடிப்பில் இலங்கையர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.
அங்கு பணியாற்றிய கம்பாலாவில் கடமை புரிந்த ராமராஜா கிருஷ்ணா என்பவரே சம்பவ இடத்தில் கொல்லப்பட்டுள்ளதாக கென்யாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் ஜயந்த திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்தை வீழ்த்தி உலக சாம்பியன் மகுடம் சூடியது ஸ்பெயின்

ஜொகான்னஸ்பர்க் சாக்கர் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஹாலந்துக்கு தண்ணி காட்டிய ஸ்பெயின் 1 -  0  என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதன் முறையாக உலக கோப்பை கால்பந்தில் சாம்பியன் ஆனது.

சல்மான் கான், சஞ்சய் தத், அனில்கபூர் உட்பட முன்னணி நடிகர்கள் வருகை – படங்கள் உள்ளே

சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழா கொண்டாட்டங்கள் கொழும்பில் நேற்று கோலாகலமாக ஆரம்பித்தன. சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற சர்வதேச பத்திரிகையாளர் விழாவுடன் இது ஆரம்பமானது.

பாராளமன்ற சபாநாயகரின் வாசஸ்தலத்துக்கு அருகில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதியுயர் பாதுகாப்பு வலயப்பகுதி ஆகிய பாராளமன்ற சபாநாயகரின் வாசஸ்தலத்தருகே சடலமொன்று பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
அருகிலுள்ள வாய்க்கால் ஒன்றிலேயே அழுகிய நிலையிலுள்ள இச்சடலம் காணப்பட்டது.பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக தகவல்கள் விரைவில்..

தமிழர்களை அழிவிலிருந்து மீட்க்கவே புலிகளிலிருந்து கருணா அம்மான் பிரிந்தார் – அலிசாஹிர் மௌலானா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து ஐ. தே. க. எம்.பியாக பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தவர் தான் அலி சாஹிர் மௌலானா. இந்தப் பெயரை கேட்டதும் முதலில் ஞாபகத்துக்கு வருவது இன்று அமைச்சராகவிருக்கும் கருணாஅம்மான் தான்.  நீண்ட ஒரு இடைவெளிக்குப் பின்னர் நாடு திரும்பியுள்ள அலி சாஹிர் மௌலானாவை கொழும்பில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சந்திப்பதற்கான நேரத்தையும்

மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாமில் குண்டொன்று தவறுதலாக வெடித்ததில் படைவீரர் ஒருவர் பலி, 3 பேர் காயம்.

மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் குண்டொன்றை செயலிழக்க வைக்கும் போது தவறுதலாக வெடித்தில் குண்டு செயலிழப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததுடன். மட்டக்களப்பு குண்டு செயலிழக்கும் பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலீசார் மற்றும் இராணுவ லெப்டினன் ஒருவரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மூன்று பேரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் இன்று

ஏறாவூர் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாத்திரைகளினால் 93 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.

மட்டக்களப்பு  ஏறாவூர் மாக்கார் மாக்கார் மகாவித்தியாலயத்தில் இன்று காலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாத்திரைகள் ஒவ்வாமையால் 93 மாண, மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 93 மாணவர்களில்  8 மாணவர்கள் மட்டக்களப்பு போதான வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர். இச் சம்பவத்தை தொடர்ந்து அப் பாடசாலை மாணவர்களிடையே அச்சம் நில

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம், இலங்கையில் பதற்ற நிலை !!! (வீடியோ இணைப்பு)

இந்தோனேஷிய, சுமத்ராவில் சற்று முன்னர் சக்தி வாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ரிச்டர் அளவில் இது 7.9 ஆகப் பதியப்பட்டுள்ளது. இது மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இலங்

அமைச்சர் முரளிதரன் அவர்களின் தலையீட்டால் மண்ணம்பிட்டி சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்வேறு இராணுவ சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டுவருகின்றன. இதன் ஒரு கட்டமாக தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடிய பின்னர் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு மற்றும் திருமலை செல்லும் பிரதான பாதையிலுள்ள மண்ணம்பிட்டி சோதனைச்சாவடி அகற்றப்பட்டுள்ளது. இச் சோதனை சாவடி அகற்றப்பட்ட போதிலும் பாதனையினுடாக செல்லும் சந்தேகத்துக்

கிழக்கில் மீன் பிடிக்கு விதிக்கப்பட்டிருந்த நேரக்கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது !!

கிழக்கு மாகாண கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நாளை (15) முதல் நீக்கப்படவுள்ளது. இதன்படி நாளை முதல் கிழக்கு மாகாண மீளவர்கள் எவ்வித நேரக் கட்டுப்பாடுமின்றி கடலில் மீன் பிடிக்க முடியும். இந்தத் தகவலை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ வெளியிட்டார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். திருகோணமலை மீனவத்துறைமுகத்தில் இடம்

மட்டு. மாநகரசபை முதல்வர் சிவகீர்த்தா பிரபாகரன் சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைய இணக்கம் !!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் மட்டு. மாநகர சபை தேர்தலில் மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்ட மேயர் சிவகீர்த்தா பிரபாகரன் சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைவதற்க்கு இணக்கம் தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களை மட்டக்களப்பிலுள்ள சிறீலங்கா சுதந்திரக்கட்சி மாவட்ட செயலகத்தில் வைத்து நீண்ட நேர கலந்துரையாடலின் பின்னர் இவ்