E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

சல்மான் கான், சஞ்சய் தத், அனில்கபூர் உட்பட முன்னணி நடிகர்கள் வருகை – படங்கள் உள்ளே

சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழா கொண்டாட்டங்கள் கொழும்பில் நேற்று கோலாகலமாக ஆரம்பித்தன. சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற சர்வதேச பத்திரிகையாளர் விழாவுடன் இது ஆரம்பமானது.

எளிமைதான் ஒரு மனிதனை பக்குவப்படுத்துவதோடு பல்வேறு உயர் நிலைக்கு கொண்டு செல்லும்.

எளிமைதான் ஒரு மனிதனை பக்குவப்படுத்துவதோடு பல்வேறு உயர் நிலைக்கு கொண்டு செல்லும் என்பதற்கு உதாரணம் ஏ.ஆர்.ரஹ்மான். எப்போதும் தலைகனத்தில் ஆடாதவர். அதனால்தான் ஆஸ்கர் விருது வரை உயர்த்தியிருக்கிறது. வழக்கம்போல தனது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார் இசைப்புயல். இந்த 44 வயதில் இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற சந்தோஷத்தை எவ்வளவு ஆர்ப்பாட்டமாகவும் கொண்டாடி இருக்கலாம். ஆனால் தனது குடும்பத்தார் நெருங்கிய நண்பர்களோடு மட்டும் நேற்று முன் தினம் தனது பிறந்த

உலகமெங்கிலும் வெற்றிநடை போடும் ஹொலிவூட் திரைப்படம் அவதார்.

உலகமெங்கிலும் வெற்றிநடை போடும் ஹொலிவூட் திரைப்படமான அவதார் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வசூலில் சாதனை படைத்துள்ளது. வார இறுதியில் மட்டும் குறித்த திரைப்பட டிக்கட் விற்பனையின் மூலம் 278 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திரட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவதார் திரைப்பட டிக்கட் விற்பனையின் மூலமே அதிகளவு லாபம் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் வெளியான டார்க் நைட் திரைப்படம் வார இறுதியொன்றில் 253

இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே உடன் படித்த பெண்ணுக்கு ஐலவ்யூ சொன்னவன் நான் – நடிகர் விஷால்.

நான் படிக்கிற காலத்திலிருந்தே தீராத விளையாட்டுப் பிள்ளைதான். இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே உடன் படித்த பெண்ணுக்கு ஐலவ்யூ சொன்னவன் நான் என்றார் நடிகர் விஷால். விஷால் நடிக்கும் தீராத விளையாட்டு பிள்ளை படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது. இந்தப் படத்தின் அறிமுக பிரஸ் மீட் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற விஷால் படத்தின் தலைப்புக்கான காரணத்தைக் கூறினார். “இந்தப் படம் என்னுடைய சொந்த வாழ்க்கைக் கதையா என்று நிறையபேர் கேட்கிறார்கள். அவர்களுக்கு என

H.I.V, எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளான 1000 குழந்தைகளை தத்தெடுக்கும் கமல் ஹாசன் !

எச்.ஐ.வி, எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளான 1000 குழந்தைகளை தத்தெடுக்கவிருப்பதாக நடிகர் கமல் ஹாசன் கூறினார். இன்று ( 01.12.2009) உலக எய்ட்ஸ் தினம். உலக அளவில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோரில் குழந்தைகள் அதிக அளவில் உள்ளனர். அவர்களுக்குத்தான் எச்.ஐ.வி. கிருமி பாதிப்பு வெகு சுலபமாக நடக்கிறது. தமிழகத்தில் 2,651 குழந்தைகள் இந்த ஆண்டு புதிதாக எச்ஐவி தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர். இப்படிப்பட்ட குழந்தைகள் சமுதாயத்தால் புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது. இந்த நிலையில், எச்ஐவி, எய்ட்ஸால் பாதிக்கப்

3 கோடி பெறுமதியான நகைகள், 50 இலட்சம் பெறுமதியான புடவை என ஆடம்பரமாக நடந்த ஷில்பாஷெட்டி திருமணம்.

பிரபல இந்தி நடிகை ஷில்பாஷெட்டி, ராஜ்குந்த்ரா திருமணம் மும்பையில் ஆடம்பரமாக நடந்தது. இந்த திருமணத்துக்காக அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ஒன்றின் விலை ரூ.5 அயிரம். முகூர்த்தத்தில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பிரத்யேக புடவையை உடுத்தி இருந்தார். அந்த புடவையின் விலை ரூ.50 லட்சம். நவீன வேலைப்பாடுகளுடன் அந்த புடவை தயார் செய்யப்பட்டு இருந்தது. பாந்த்ராவில் உள்ள பிரபல கடையொன்றில் “டிசைன்” செய்து அப்புடவையை வாங்கினார்.  ஷில்பாஷெட்டி கழுத்திலும் கை,

உலக அழிவியினை கற்பனை உலகிற்கு கொண்டு செல்லும் “2012”திரைப்படம்.

‘உலகம் அழிய நேர்ந்தால்…’ என்ற இந்த ஒற்றைச் சொல்லை வைத்துக் கொண்டு இன்டிபெண்டன்ஸ் டே, தி டே ஆப்டர் டுமாரோ போன்ற படங்களைத் தந்த ரோலண்ட் எமெரிக்கின் கற்பனையின் இன்னுமொரு படம் இந்த 2012. உலகம் முழுக்க பாக்ஸ் ஆபீஸ் வசூலில் கலக்கிக் கொண்டிருக்கும் இந்தப் படம் தமிழில் ‘ருத்ரம்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. கதை இன்றைய 2009ல் துவங்குகிறது. பூகம்பம் மற்றும் சுனாமி மூலம் பூமிக்கு அழிவு நெருங்குவதை விஞ்ஞானிகள் அமரிக்க அரசுக்கு அறிக்கையாகத் தருகிறார்கள். [...]

தனுஷ் படங்களை தொடர்ந்து வரிசையாக வாங்க ஆரம்பித்துவிட்டது சன்பிக்சர்ஸ்.

தனுஷ் படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாகி வருவதால் தனுஷ் படங்களை தொடர்ந்து வரிசையாக வாங்க ஆரம்பித்துவிட்டது சன்பிக்சர்ஸ். இப்போது ‘குட்டி’ படத்தை வாங்கிய சன் அடுத்து தனுஷ் நடித்து வெளிவர உள்ள ‘மாப்பிள்ளை’ படத்தை வாங்கியுள்ளது. இந்தப் படத்தைத் தயாரிப்பவர் தயாரிப்பாளர் நேமிக்சந்த ஜபக். இவர் சன் பிக்சரிடம் இந்தப் படத்தை விற்றுவிட்டார். தனுஷூக்கு இந்தப் படத்தில் ஜோடியாக தெலுங்கு முன்னணி நாயகியான ஹன்ஷிகா நடிக்கிறார். இவர்களுடன் ஜெயபிரதாவும் ‘மாப்பிள்ளை’

முதல் முறையாக இணையத்தில் சூரியாவின் புத்தம் புதிய திரைப்படம் ஆதவன், காணத்தவறாதீர்கள்..(திரைப்படம் இணைப்பு)

மின்சாரக் கண்ணா என்ற தனது தோல்விப் பட பார்முலா இந்த முறையாவது வெற்றியைத் தருமா என (விஷ) பரீட்சையில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார். ரிசல்ட்? கடைசி பாராவைப் பாருங்க ! குழந்தைகளின் உடலுறுப்புக்களைத் திருடி விற்கும் ஒரு கும்பலைப் பற்றி விசாரிக்கும் பொறுப்பு நேர்மையான நீதிபதி முரளியிடம் வருகிறது. உடனே அதில் சம்பந்தப்பட்ட ஒரு பிராடு டாக்டர், நீதிபதியைக் கொல்லத் திட்டமிட்டு, கூலிக்கு கொலை செய்யும் சூர்யாவை அனுப்பி வைக்கிறார். முதல்முறை

பூகம்பத்தின்போது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடினோம் – ஜெயம் ரவி, நடிகை தமன்னா

தயாரிப்பாளர் மோகன் தயாரிக்கும் “தில்லாலங்கடி’ என்ற படத்தின் படப்பிடிப்பு மலேஷியாவில் நடைபெறுகிறது. இந்தப் படத்தை அவருடைய மூத்த மகன் எம்.ராஜா இயக்கம் செய்கிறார். இளைய மகன் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். கடந்த முதலாம் திகதி சுமத்ரா தீவில் பூகம்பம் ஏற்பட்டபோதுஇ அதன் பாதிப்பு மலேஷியாவிலும் ஏற்பட்டது. அப்போது “தில்லாலங்கடி’ படப்பிடிப்பு மலேஷியாவில் உள்ள லெஜன்ட் ஹோட்டலின் 34 ஆவது மாடியில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

உன்னைப்போல் ஒருவன், நம்மில் ஒருவன் ! நம்’உள்’ ஒருவன் !!!

பாடல் இல்லை சண்டைக் காட்சிகள் இல்லை தனி ட்ராக்கில் வரும் அசட்டு காமெடி இல்லை. இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாக ஓடும் உன்னைப்போல் ஒருவனில் துப்பாக்கி ரவையின் வேகம்… கச்சிதம்… சென்னை போலீஸ் கமிஷனரின் (மோகன்லால்) வாழ்க்கையில் ஒரு நாள் நடந்த அசாதாரண சம்பவமே கதை. அன்றைய தினம் அவரது செல்போனுக்கு மர்ம அழைப்பு ஒன்று வருகிறது. சென்னை

ஆட்டம் போட மாளவிகா ரெடி, பார்க்க நீங்க ரெடியா ?

‘வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்’ பாடலுக்கு மாளவிகா ஆடிய ஆட்டத்தை அவ்வளவு ஈசியாக யாரும் மறந்துவிட முடியாது. அதற்கு பிறகு சில படங்களில் அவர் ஆடி ஆடி களைத்தாலும் அதற்கு பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். கலைசேவையை அவ்வப்போது செய்து வந்த மாளவிகாவை மீண்டும் அழைத்து வந்திருக்கி

ரம்பாவைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள மோதிரத்தோடு வந்து ரகளை செய்த இளைஞர்!

ரம்பாவைத் திருமணம் செய்து கொள்ள மோதிரத்துடன் ரம்பா வீட்டு வாசலில் தகராறு செய்த ரசிகரால் பெரும் ரகளை ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தொடை அழகி என்ற படப்பெயருடன் பரபரப்பாக இருந்து சொந்தப் படம் தொடர் தோல்வி காரணமாக காணாமல் போய் இப்போது காலம் போன காலத்தில் மீண்டும் சின்னச் சின்ன படங்களில் தலைகாட்ட முயற்சித்து

நடிகை ஷில்பா ஷெட்டிக்கு சாமியார் திடீர் முத்தம், மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் ஷில்பா.

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி மீண்டும் முத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற அவரை சாமியார் ஒருவர் கட்டிபிடித்து முத்தமிட்டுள்ளார். ஏற்கனவே மும்பையில் நடந்த படவிழாவுக்கு வந்த ஹாலிவுட் பிரபல நடிகர் ரிச்சர்ட் கெரே ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கூட்டத்தி னர் முன்னிலையில் ஷில்பா ஷெட்டியை வளைத்து பிடித்து முத்தமிட்டார். அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் போலீசுக்கும் சென்றது. முத்தமிட்டபோது ஷில்பா ஷெட்டி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும்

இலங்கையில் நடந்த துயர சம்பவங்கள் மிகவும் பாதித்ததால் எந்த விழாக்களிலும் பங்கேற்கவில்லை ‐ ஏ.ஆர். ரஹ்மான்

இலங்கையில் நடந்த துயர சம்பவங்கள், எனது மனதை மிகவும் பாதித்ததால் கடந்த 2 மாதங்களாக எந்த விழாக்களிலும் பங்கேற்கவில்லை என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பட்டமளிப்பு விழாவில் ரஹ்மானுக்கு, கௌரவ டாக்டர் பட்டத்தை ஆளுநர் பர்னாலா வழங்கினார். பட்டத்தை பெற்ற பின் அவர் வழங்கிய ஏற்புரை: இலங்கையில் நடந்த வன்முறை சம்பவங்கள் எனது மனதை மிகவும் பாதித்தன. திரையுலகின் மிகப் பெரிய

கோடம்பாக்கத்தையே ஒரு கலக்கு கலக்கும் லேட்டஸ்ட் காதல்.

மேட்ரிமோனியல் வெப்சைட் (மணப் பொருத்தத் தகவல்கள் அளிக்கும் தளம்) ஒன்று ஏற்பாடு செய்திருந்த வரன்களின் மெகா கலந்துரையாடல் அது. கலந்துகொண்ட மணமாகாத ஆண்களிடம் ‘உங்கள் வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு 80 சதவிகிதத்தினரின் பதில் ‘சினிமா நடிகை சினேகா போல இருக்க வேண்டும்!’ தனது ‘ஹோம்லி லுக்’ காரணமாக பேச்சுலர்களைப் பேச்சுமூச்சில்லாமல் கட்டிப் போட்டிருக்கிறார் இந்தச் சிரிப்பழகி. கனவுகளில் மட்டும் காட்சி தருபவர்களிடமே அவ்வளவு ‘டிமாண்ட்’

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானுக்கு லண்டனில் டாக்டர் பட்டம் !

சர்வதேச திரையுலகில் இந்தியாவை தலைநிமிரச் செய்த ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரஹ்மானுக்கு பிரிட்டனின் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகம் நேற்று டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.இசைத் துறையில் ரஹ்மான் செய்துள்ள அபார சாதனைகளுக்காக இந்த பெருமைக்குரிய விருது அவருக்கு வழங்கப்பட்டது. இதற்கான விழா லண்டனில் உள்ள மிடில்செக்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் விமரிசையாக நடந்தது. மிடில்செக்ஸ் பல்கலைக் கழக துணைவேந்தர் ரஹ்மானுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார். இந்த விருதினைப்

அயன் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து தீபாவளிக்கு வருகிறது ஆதவன் !

அயன் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து சூர்யா நடித்து வரும் படம் ஆதவன். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் கே.எஸ். ரவிக்குமார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஏகப்பட்ட செலவில் உருவாகி வருகிறது இந்த படம். இந்தப் படத்திற்காக வெளிநாடுகளில் சென்று இப்போது படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். படத்தின் காட்சிகளில் பாதி அளவுக்கு படப்பிடிப்பு நடத்தி முடித்து விட்டனர். இன்னும் மீதி காட்சிகளுக்கு தொடர்ந்து [...]

தனுஷ் நடிக்கும் ஆடுகளம் படத்திலிருந்து நடிகை த்ரிஷா விலகல் !

தனுஷ் வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் ஆடுகளம் படத்திலிருந்து நடிகை த்ரிஷா விலகி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இன்னும் இந்தச் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் தெலுங்குப் படங்களுக்கே முன்னுரிமை கொடுத்து வருகிறார் த்ரிஷா. தமிழில் சிம்புவுடன் விண்ணைத் தாண்டி வருவாயா எனும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும்போது த்ரிஷாவுடன் சிம்பு மிகவும் நெருக்கமாகி விட்டதாகவும்இ இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் வந்தன. வழக்கம்போல சிம்பு மவுனம் காக்கஇ த்ரிஷா மட்டும்

இலங்கைத் தமிழரின் படமான சிவப்பு மழைக்கு இந்திய தணிக்கைத் துறை அனுமதி மறுப்பு !

சுரேஷ் ஜோக்கிம் என்ற இலங்கைத் தமிழர் எடுத்த கின்னஸ் உலக சாதனைப் படமான சிவப்பு மழைக்கு இந்திய தணிக்கைத் துறை அனுமதி மறுத்துள்ளது. இதுவரை பல பிரிவுகளில் 58 கின்னஸ் சாதனைகளைப் படைத்தவரான சுரேஷ் ஜோக்கிம் இப்போது கனடாவில் வசிக்கிறார். மொத்தம் 12 நாட்களுக்குள் ஒரு படத்தின் ஷூட்டிங் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து வெளியிடுவதாகத் திட்டமிட்டிருந்தார். இது கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றது. மீரா ஜாஸ்மின் சுமன் விவேக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்