E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

நித்யானந்தாவுடன் தேவ‌ கௌடா கட்சி எம்எல்ஏ சந்திப்பு

பாலியல் வழக்கில் சிக்கி, கைதாகி, ஜாமீனில் வெளியே வந்துள்ள நித்யானந்தாவை மாஜி பிரதமர் தேவ கௌடாவின் கட்சியின் முக்கியத் தலைவரான பாலகிருஷ்ணா சந்தித்துப் பேசினார். பெங்களூர் மாகடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான இவர் மதசார்பற்ற ஜனதா தளத்தின் முன்னணி தலைவராவார்.

போபால்-விஷ-வாயு-கசிவு-வழக்கு குற்றவாளிகளுக்கு-2-ஆண்டு-சிறை தீர்ப்பு

போபால் விஷ வாயு கசிவு வழக்கில் 26  ஆண்டுகளுக்குப் பின் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், குற்றவாளிகள் என அறிவித்த 8 பேருக்கு தலா 2 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் யூனியன் கார்பைடு என்ற நிறுவனத்தில் இருந்து 1984 டிசம்பர் 2 ஆம் தேதி நள்ளிரவுக்கு மேல் விஷ வாயு  கசிந்தது.இதில்  ஆயிரக்கணக்கானோர்  உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் நிரந்தரமாக பாதிக்கப்பட்டனர்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமத்தில் நடந்தது விபத்தே : காவல்துறை திட்டவட்டம்

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு ஒரு விபத்துதான் என்றும், அதுதொடர்பாக நபர் ஒருவர் பிடிபட்டுள்ளார் என்றும் கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. அஜய் குமார் சிங் தெரிவித்தார்.
மேலும்,    துப்பாக்கியால் குறிவைக்கப்பட்டது ஸ்ரீ.ஸ்ரீ.ரவிசங்கர் அல்ல;  தெருக்களில் அலைந்துகொண்டிருந்தா நாய்களே என்றும் அவர் கூறினார்.

போலிச்சாமியார்களின் ஏமாற்றுவித்தைகளை இனியும் அனுமதிக்க முடியாது, ஊடகங்களுக்கும் எச்சரிக்கை – கலைஞர் கருணாநிதி

சமீபத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் சாமியார்களின் ஏமாற்று வித்தைகளைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

தேர்தல்களில் நல்லவர்கள் வெற்றி பெறும் போது தான் தமிழகத்திற்கு விடிவுகாலம் பிறக்கும் !

தேர்தல்களில் நல்லவர்கள் வெற்றி பெறும் போது தான் தமிழகத்திற்கு விடிவுகாலம் பிறக்கும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஜன​நா​ய​கத்​தில் வேண்​டா​த​வர்​களை நீக்​க​வும்​​, வேண்​டி​ய​வர்​களை ஆட்​சிக்​குக் கொண்டு வர​வும் வகை​செய்வதே தேர்​தல்.​ ஆனால் தேர்​தல்​கள் நியா​ய​மா​க​வும்​​ சுதந்​தி​ர​மா​க​வும் நடை​பெற வேண்​டும்.​ இதற்​குத் தேர்​தல் ஆணை​யம்​தான் நேரடி பொறுப்பு என்​றா​லும்,​​ நிர்​வாக ரீதியில் மாநில அர​சு​தான் இதற்கு உத்​த​ர​

2005 தேர்தல் பகிஷ்கரிப்பு விடுதலைப்புலிகளின் அவசர முடிவு – தமிழக முதல்வர் கருணாநிதி

இலங்கையில் 2005ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களை கேட்டுக் கொண்டமை ஒரு அவசர முடிவாகும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். இதன் விளைவு, விடுதலைப் புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்திருந்த ரணில் விக்கிரமசிங்கவை மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்க உதவியது என்று தெரிவித்த கருணாநிதி, அதிலிருந்து பேச்சுவார்த்தை முடக்கப்பட்டு விட்டது

தந்தை குரங்கிடம் இருந்து தனது குழந்தையை காப்பாற்ற தாய் குரங்கு ஒரிசா காவல்நிலையத்தில் மனு !!

தந்தை குரங்கிடம் இருந்து தனது குழந்தையை காப்பாற்ற தாய் குரங்கு ஒரிசா காவல்நிலையத்தில் மனு கொடுத்துள்ளது. ஒரிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள ஆஸ்ட ராஞ்ச் நகரில் ஏராளமான குரங்குகள் உள்ளன. இவற்றில் ஒரு பகுதி குரங்கு கூட்டம் மார்க்கெட் பகுதியில் வசிக்கின்றன. இதில் ஒரு பெண் குரங்கு 3 மாத குட்டியுடன் இருக்கிறது. இந்த குட்டியை கொல்ல ஆண் குரங்கு ஒன்று தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அந்த ஆண் குரங்கு குட்டியின் தந்தையாக இருக்கலாம் என்று [...]

இலங்கையில் இராணுவப்புரட்சி ஒன்று இடம்பெறலாம் என்று வெளியான தகவலை இந்தியா மறுத்துள்ளது.

இலங்கையில், இராணுவப்புரட்சி ஒன்று இடம்பெறலாம் என்ற எச்சரிக்கையில் இந்திய படையினர் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டதாக வெளியான தகவலை இந்தியா மறுத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சசி தருர் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஒக்டோபர் நடுப்பகுதியில் இராணுவப்புரட்சி ஒன்று மேற்கொள்ளப்படலாம் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி இந்திய படையினர் விழிப்புடன் வைக்கப்பட்டனர் என கூட்டுப்படை தலை

மகன் காதலித்ததால் தாயும் தங்கையும் நிர்வாணப்படுத்தி ஊர்வலம், தண்டனை நிறைவேற்றிய காதலியின் சகோதரர்கள்.

மகன் காதலித்ததால் தாயையும் தங்கையையும் நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்திய சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் இடம்பெற்ற இக்கொடூர சம்பவத்தைப் பற்றி தெரியவருவதாவது, கல்யாண்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் புஜ்விர்சிங் (வயது 24) இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்னை காதலித்து வந்தார். இவர்களின் காதல் விவகாரத்தை அறிந்த பெண்னின் சசோதரர்களான தர்மேந்திரா, வீரேந்திரா ஆகியேர் ஆத்திரம் அடைந்தனர். இதனை தனிப்பதற்காக அவர்கள் தம்

மாவோயிஸ்ட் போராளிகளின் துப்பாக்கிச்சூட்டில் 4 போலீசார் பலி.

மேற்கு வங்காளத்தில் புத்ததேவின் உரையால் ஆத்திரமடைந்த மாவோயிஸ்ட் போராளிகள் நேற்று நடத்திய தாக்குதலில் 4 போலீஸார் உயிரிழந்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் மாவட்டத்துக்கு 2 நாள் பயணமாக முதல்-மந்திரி புத்தாதேவ் பட்டாச்சார்யா சென்றிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். முதல்- மந்திரி புத்தா தேவ் பட்டாச்சார்யா தன் சுற்றுப்பயணத்தை

அந்தரத்தில் பறந்த சித்தர் ஒருவரால் திருவண்ணமலை அடிவாரப்பகுதியில் பரபரப்பு !! (வீடியோ இணைப்பு)

தமிழ்நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர ஆலயம் மிகப் பிரசித்தி பெற்றது. அங்கு அந்தரத்தில் வானத்தை நோக்கி பறந்த சித்தர் ஒருவரால் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. பஞ்சபூத சிவத்தலங்களில் அக்கினி ஸ்தலங்கமாக போற்றப்படும் இவ் ஆலயத்தில் ஏறாளமான சித்தர்களும் ஜோகிகளும் வாழ்ந்து வருவதாக கூறப்படும் இங்கு திருவண்ணமலை அடிவாரத்தை சுற்றி பக்தர்கள் கிரி வலம் வருவது வழக்கம். மின் ஊழியர் ஒருவர் கிரி வல பாதையில் சென்று கொண்டிருந்த ஒருவர்

அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் நடிப்பு எனது தொழில், அதை என்றைக்கும் விட மாட்டேன் – விஜயகாந்

‘அரசியலில் ஈடுபட்டிருந்தாலும், நடிப்பை விட மாட்டேன்’ என்று விஜயகாந்த் கூறினார். பிலிம் பேப்ரிகேட்டர்ஸ் தயாரிக்கும் படம் ‘ரேனிகுண்டா’. இதில் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி மகன் ஜானி ஹீரோ. சனுஷா ஹீரோயின். ஒளிப்பதிவு, சக்தி. வசனம், சிங்கப்புலி. கணேஷ் ராகவேந்திரா இசையில் பிறைசூடன், நா.முத்துக்குமார், யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளனர். ஆர்.பன்னீர்செல்வம் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று மாலை நடந்தது. முதல் சி.டியை விஜயகாந்த் வெளியிட்டு பேசியதாவது,

இன்று அறிஞர் அண்ணாவின் 101 ஆவது பிறந்த நாள் !

அறிஞர் அண்ணாவின் 101ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அண்ணா சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளிலும் அண்ணாவின் படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகி

புதுடெல்லி பாடசாலையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 5 மாணவிகள் பலி.

புதுடெல்லியில் ஒரு பாடசாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 5 மாணவிகள் பலியாகியுள்ளனர். மேலும் முப்பது பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோர் சிலரின் நிலை கவலைக்குறியதாக உள்ளது. மழையால் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பாடசாலை கட்டிடத்தில் மின்சாரம் பாய்வதாக வதந்தி பரவியதால் இந்த நெரிசல் ஏற்பட்டதாக

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பலியான செய்தி கேட்டு அதிர்ச்சியில் 80 பேர் பலி !

ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பலியான செய்தி கேட்டு மாநிலம் முழுவதும் அதிர்ச்சியில் பெண்கள் உட்பட 70 பேர் மரணமடைந்தனர். 10 பேர் தற்கொலை செய்துகொண்டனர். ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் மோசமான வானிலை காரணமாக மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் முதல்வர்

மும்பையை சேர்ந்த இளம் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகள்.

மும்பையை சேர்ந்த இளம் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பிறந்துள்ளன. மும்பையை சேர்ந்தவர் உபைத் கான். இவரது மனைவி சபீரா கான். நிறைமாத கர்ப்பிணியான சபீரா அங்குள்ள கோகியாபென் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் காலை சபீராவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. இதைதொடர்ந்து அவர் அடுத்தடுத்து 5 ஆண்

கல்லூரி மாணவரின் சடலத்தினை இரு பெண்கள் வீசிவிட்டுச் சென்றதால் சேலத்தில் பரபரப்பு !

கல்லூரி மாணவரின் சடலத்தினை காரில் கொண்டுவந்த இரு பெண்கள் அவரது வீட்டு முன்பு வீசிவிட்டுச் சென்றதால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் கணபதிபட்டியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் சென்னகேசவன் (24). திருப்பூர் அரசுக்கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்தார். இவர் கடந்த 1ம் தேதி ஊருக்கு வருவதாக தந்தை

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகொப்டர் விபத்தில் மரணம்.(படம் இணைப்பு)

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணித்த ஹெலிகொப்டர் கர்னூலுக்கு கிழக்கே ருத்ரகொண்டா ரோலபெண்டா இடையே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விபத்துக் குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ராஜசேகர ரெட்டி உட்பட 5 பேரின் உடல்களும் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. ஏற்கனவே அவர் பயணித்த ஹெலிகொப்டர் காணாமல் போயி

தமிழ்நாடு, காங்கிரஸ் அலுவலகத்தில் பாதி எரிந்த சோனியா உருவப்படத்தின் மேல் பிரபாகரன் படம் !

கடலூர் மாவட்ட, காங்கிரஸ் அலுவலகத்தில் சோனியா காந்தியின் உருவப்படம் பாதி எரிந்த நிலையில், அதன்மேல் விடுதலைப்புலிகளின் தேசியக்கொடி மற்றும் பிரபாகரனின் படம் இருக்கக் காணப்பட்ட சம்பவத்தால், அங்கு பதட்டம் ஏற்பட்டது. கடலூர் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில், மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் உள்ளது. சுதந்தின விழா கொண்டாடுவதற்காக, 14 ம் திகதி கொடி மேடை வெள்ளையடித்து காங்கிரஸ்

பன்றிக்காய்ச்சலுக்கு சென்னை மாணவன் பலி, பீதியில் தவிக்கும் பெற்றோர்

உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ள பன்றிக் காய்ச்சல் நோய் தற்போது தமிழக மக்களை வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கி சென்னையை சேர்ந்த 4 வயது சிறுவன் சஞ்சய் நேற்று முன்தினம் பலியானான். இதன் பிறகு சென்னை முழுவதும் இந்த நோய் பற்றிய பீதி ஏற்பட தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் வேளச்சேரி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் மற்ற பகுதிகளில் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கின. இந்த பள்ளிகளுக்கு தங்களது குழந்தைகளை அனுப்பிய

 பக்கம் 2 இல் 1  1  2 »