E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

வெற்றுத் தாளில் கையொப்பம் இட்டு பிரபாகரனிடம் கொடுத்த 22 மந்தைகளின் கூட்டமே கூத்தமைப்பு !

யார் அங்கே! தமிழ் தேசியக் கூட்டமைப்பா? அப்படி ஒரு அமைப்பு இலங்கையில் இருக்கின்றதா? அது என்ன சம்மந்தன் கோஷ்டியா….? சிவாஜிலிங்கம் கோஷ்டியா….? கிஷோர் கோஷ்டியா….? கஜேந்திரகுமார் பொனனம்;பலம் கோஷ்டியா….? அல்லது குதிரை கஜேந்திரன் கோஷ்டியா….?  எந்தக் கோஷ்டியைக் குறிபிடுகின்றீர்கள்? புலிகளின் ஆயுதப் பிரசன்னம்  இருந்த காலகட்டங்களிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றொரு அமைப்புஃகட்சி ‘தனியாக’ இருந்ததாக வரலாறு  தடையங்கள் எதனையும் காண

தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் சரத் பொன்சேகா தோற்றவரே !

இலங்கையின் 6வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான திகதி எதிர்வரும் ஜனவரி 26. இத்தேர்தலுக்காக 23 பேர் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ததுடன் நியோமல் பெரேராவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட 22 போட்டியிடுகின்றனர். தேர்தலில் 22 பேர் போட்டியிட்டாலும் போட்டி என்பது இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் அரசியலில் புதுமுகமாக தேர்தலில் குதித்துள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் பொன்சேகாவிற்கும் இடையிலேயே இடம்பெறப்போகின்றது. அத

பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டதா ?

தமிழர் தாயகங்களில் தமிழர்கள் மட்டுமல்ல பல்லினங்களும் நல்லிணக்கத்துடன் கூடி வாழும் ஒளி மயமான சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் வீண்புக்கு வேட்டையாடும் இனவாத எதிர்கட்சிகளுடன் கைகோர்த்து மீண்டும் ஒருமுறை தமிழர்களை பணயம் வைக்கும் படலத்தினை ஆரம்பித்து இருக்கின்றது கூத்தமைப்பு. அந்த இருபத்திரெண்டு அரசியல்வாதிகளும் பாராளுமன்ற கதிரைகளை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு அக்கதிரைகளை சூடாக்கினார்களே தவிர ஆக்கபூர்வமாக எத

சிறுபான்மையினர் பற்றிய சரத் பொன்சேகாவின் முரண்பாடான கருத்துக்கள் அரசியல் யாப்பை மீறுபவை !

அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக அறிவிப்பை விடுத்த தனது முதலாவது விரிவான ஊடகவியலாளர் மாநாட்டில், சரத் பொன்சேகா “எந்த வொரு சமூகமும் மித மிஞ்சிய அதிகாரங்களைக் கோரக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார். டெய்லி மிரர் 30 நவம்பர் 2009 பிரதான தலைப்புச் செய்தி). இவரின் இந்தக் கருத்தை வடக்குஇ கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கும் அதேபோல் முஸ்லிம் மக்களுக்கும் எதிரான ஒரு தாக்குதலாகவே சிறுபான்மையின மக்கள் கருதுகின்றனர்.

தெளிவற்ற சித்திரங்களுடன் தடுமாறும் ஈழத்தமிழர்கள் !!!

ஈழத்தமிழர்கள் இப்பொழுதும் ஒரு தெளிவற்ற காலசந்தியில் தான் நிற்கிறார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் வீழ்ச்சி அடைந்து ஏறக்குறைய ஏழு மாதங்கள் ஆன பின்பும் ஈழத்தமிழர்கள் இப்பொழுதும் எதிர்காலத்தைக் குறித்த தெளிவற்ற சித்திரங்களுடன் தடுமாறும் ஒரு ஜனக்கூட்டமாகவே காணப்படுகிறார்கள். முப்பத்து எட்டு ஆண்டுகால ஆயுதப்போராட்டம் தமிழர்களை அவர்களுடைய “எதிரிகளிடம்” கையளிப்பதில்தான் முடிந்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு ஊடக நண்பர் சொன்னார் “போராட்டம்

தாயக உறவுகளின் மறுவாழ்வு குறித்து அக்கறையுள்ளவர்கள் அனைவரும் கைகோருங்கள்..

அடக்கி ஒடுக்கப்பட்டுவந்த எமது இனத்தின் விடியலுக்காக துடிப்புடன் ஆயுதம் ஏந்தி போராடி தம்முயிர்களை நாட்டுக்காகவே அர்ப்பணித்த அந்த உத்தம ஜீவன்களுக்காக ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்களில் விசேட வழிபாடுகளை மேற்கொண்டு அவர்களது ஆத்ம சாந்தியடைய வேண்டும் என்று பூஜியுங்கள். அவர்கள் போற்றப்பட வேண்டியவர்களேயன்றி மறைக்கப்படகூடியவர்கள் அல்ல. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழினத்திற்கு ஒர் விடுதலையை பெற்று கொடுக்கவேண்டு

சிறுபான்மையினருக்கு சுய உரிமை கிடையாது என கூறிய பொன்சேகாவின் எதிர்கால திட்டம் என்ன ??

படை அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு அனுமதி கோரி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்த கடிதம் ஊடகங்கள் மூலமாகப் பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த மே மாத நடுப்பகுதியில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் தன்னை ஓரங்கட்டுவதற்கு அரசாங்க உயர்மட்டத்தினால் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்திருப்பதாக கவலை வெளியிட்டிருக்கும் ஜெனரல் ஓய்வுபெறுவதற்குத் தன்னை நிர்ப்பந்தித்த

புலிகள் இயக்கத்திலையும் சரி தமிழ் மக்கள் மத்தியிலும் சரி கருணாவுக்குக்கிடைத்த தகுதி வேறு எவருக்கும் கிடைக்கல்ல..

ஏதோ புதுசா தமிழீழத்த கோரி கூக்குரல் போடுவதுபோல் தமிழ்க்கட்சிகள் ஒண்டு சேரிகினமாம் எங்கட தமிழ்க்கட்சிகள், என்ன சின்னப்பிள்ளைத்தனம். இத்தனை இழப்பிற்குப்பின்னும் இவயலுடைய அரசியல் விளையாட்டு ஒரு நிலைக்குவரயில்ல! கூட்டமைப்பிற்கும் மற்றைய தமிழ் கட்சிகளுக்கம் ஒரு சமநிலைக்கு வர முடியாது இருக்கின்ற போது, சிங்கள கட்சிகளுடனான தமிழீழக் கோரிக்கைகள் எப்படி ஒத்துப்போகுமப்பு. புலத்தில் உல்லாசப்பயணம் செய்துகொண்டிருந்த எல்லா தமிழ் எம்பி

பிரபாகரனின் அழிவையே மறுத்தபடி மீண்டும் தமிழர்களை காட்டிக்கொடுக்க முயலும் சர்வதேச புலி ஆளும் வர்க்கங்கள்.

மக்களையும் புரட்சியையும் காட்டிக்கொடுத்து எதிரியிடம் சரணடைந்து கேவலமாகப் படுகொலையாகவா?, அல்லது தனக்குப் பின்னுள்ள புலிகளது புதிய ஆளும் வர்க்கம் மக்களது செல்வத்தோடு அந்நியத் தேசங்களில் சொகுசாக வாழ்வதற்கும் அவர்களது குழந்தைகள் மேலும் அடிமைப்பட்ட தமிழ் மக்களை மேய்ப்பதற்கா இன்னொரு பிரபாகரனை அவரது அநுதாபிகள் தேடுகிறார்கள்? முதலில் போராட்டத்தையும், சமூக இயக்கத்தையும் புரட்சிகரமாகப் புரிந்துகொண்ட வரலாற்றில் பிரபாகரனது பாத்திரம்குறித்து விவாதியுங்கள். அதுவே

கவலைப்படாமல் வாழ்வது எப்படி? இதுதான் இவ்வையகத்தே ஜீவிக்கின்ற அனைத்து மானுடரையும் அச்சுறுத்தும் வினா !!

கவலைப்படாமல் வாழ்வது எப்படி? இதுதான் இவ்வையகத்தே ஜீவிக்கின்ற அனைத்து மானுடரையும் அச்சுறுத்தும் வினா என்பது நிதர்சனமாகும். நான் சகல வசதிகளுடனும் செளபாக்கியமாக எப்படி இருந்தேன்! எதிர்காலத்தில் எப்படி எல்லாம் இருப்பேன் என்று கனவு காணும் செப்படி வித்தையல்ல வாழ்க்கை! மிலேனியம் ஆண்டாக மிளிருகின்ற இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கையில் யாராவது கவலைப்படாதவர்கள் உள்ளனரா? என்றால் இல்லை! என்பதுதான் பதில் கிடைக்கின்றது. ஒரு குடும்பத்தில் கணவன்

விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை, கெட்டுப் போபவன் விட்டுக் கொடுப்பதில்லை..

நிழல் தேடி அலைந்தனர், மரம் வெட்டும் மனிர்கள், ஏன் புன்னகைக்கின்றாய் பூமித்தாயே. நம்மவனுகள் எல்லாம் காட்டுக்குள்ள போய் கள்ள மரம் வெட்டுவார்கள். வெட்டி, வெட்டி மொத்த காட்டையும் அழித்துவிட்டு இறுதியில் இந்த மண்ணாங்கட்டி காட்டில் ஒதுங்கி நிற்பதற்கு கூட ஒரு நிழல் இல்லையே என வருத்தப்படுவார்கள். வருத்தப்பட்டார்கள் இப்போ வருத்தப்படுகின்றார்கள். ஆம் வருத்தப்படுகின்றார்கள். கொலை செய்யும் மனிதர்கள். கொலை செய்த மனிதர்கள். கொலைக்கு கொலைக்கருவி வாங்கிக் கொடுத்த மனிதர்கள் எல்லாம்

தொல். திருமாவளவன் என்றொரு இந்தியப்புலி இருந்தாராம், அவர் இப்ப துரோகியாம்..

தொல். திருமாவளவன், தொல். திருமாவளவன் என்றொருவர் இருந்தாராம். அவரை தொப்பிள் கொடி விடுதலைப் போராட்ட ஆதரவாளர், இந்தியப்புலி, புலி ஆதரவாளர் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினினம். அவருக்கு ஈழத்தின் மேலும் பிரபாகரன் மீதும் இருந்த அளப்பெரிய பற்றால் விடுதலைச் சிறுத்தை என்ற கட்சியையும் பதிவுசெய்து தமிழ் நாட்டில் ஒரு இளைஞர் படையணியையே நடாத்திவந்த பெருந்தகை. அவருடைய விடுதலைப் போராட்டப் பேச்சில் ஆவேசப்பட்டு பலர் தீக்குளித்து மரணத்தை

சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் கிரிக்கெட் உலகின் துடுப்பாட்ட மேதைகள் (சிறப்புக்கண்ணோட்டம்)

நடப்பு ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் தனது 38-வது சதத்தை எட்டியதோடு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 11,000 ரன்களை எட்டிய 4-வது வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த நிலையில் அவர் இந்திய பேட்டிங் மாஸ்ட்ரோ சச்சின் டெண்டுல்கரின் சாதனைக்கு மிக அருகில் இருப்பதால் இருவரது பேட்டிங் குறித்து ஒரு ஒப்பு நோக்கு பார்வையை முன் வைக்கலாம் என்று தோன்றுகிறது. இருவரும் ரேஸ் குதிரைகள் [...]

வாழ்க்கையின் முக்கிய தருணங்களில் நாம் கடைப்பிடிக்கும் மெளனங்கள் நல்ல விளைவை ஏற்படுத்தி விடுவதுண்டு.

“அநியாயக்காரர்கள் இழைக்கும் அநீதங்களை விட அவற்றை நீதியான மனிதர்கள் எனப்படுவோர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மெளனமாய் சகித்துக் கொண்டி ருப்பது குறித்தே நாம் இந்த தலைமுறையில் வருத்தமுற வேண்டும்” மார்ட்டின் லூதர்கிங். வாழ்க்கையின் முக்கியமான பல தருணங்களில் நாம் கடைப்பிடிக்கும் மெளனங்கள் மிக நல்ல விளைவை ஏற்படுத்தி விடுவதுண்டு. குடும்ப உறவில் கணவன்-மனைவிக்கிடையே வாய்ச்சண்டைகள் முற்றும் போது இருவரில் ஒருவர் கடைப்பிடிக்கும்

தமிழர்களின் எதிரியும் அழிவின் காரணகர்த்தாவும் தமிழர்களேயன்றி சிங்களவர்களல்ல !!

தமிழர்களின் எதிரியும் அழிவின் காரணகர்த்தாவும் தமிழர்களேயன்றி சிங்களவர்களல்ல !!! இன்று தமிழர்கள் நிம்மதியாக இருப்பதற்குக்காரணகர்த்தா தற்போதைய அமைச்சரன்றி வேறுயாருமல்ல ! பிள்ளையான் என்ற போராளியின் உயிரைக்காத்து, சிவநேசன் என்ற மனிதனாக்கிய கருணா அம்மானுக்கு பிள்ளையானின் பெயரில் நடாத்தப்படுகின்ற சூழ்ச்சி அவரால் முறியடிக்க முடியாததல்ல, ஆனால் குற்றத்தை குற்றவாளிகள் உணர்ந்து திருந்தவே சந்தர்ப்பம் வழங்கும் மாமனிதன் அம்மான் அவர்கள். கும்பலிலே கோவிந்தா

தண்டனை பற்றிய அச்சம் இருக்குமேயானால் விபத்துகள் பெருமளவில் குறையும்.

இன்று வீதி விபத்துகள் ஏறக்குறைய நாளாந்த நிகழ்வாகி யிருப்பதால் மீண்டும் அது பற்றிக் கூற வேண்டிய தேவை எழுந்துள்ளது. வருட மொன்றில் இரண்டாயிரத்துக்கும் மூவாயிரத்துக்கும் இடைப்பட்ட எண்ணிக் கையினர் வீதி விபத்துகளால் உயிரிழப்பதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஐம்பதாயிரம் பேர் வரையில் இவ்விபத்துகளில் படுகாயமடைந்து வைத்தி

கருணா அம்மானின் கரங்களை பலப்படுத்துவதன் அவசியமும் அவரைப்பற்றிய அவதூறான செய்திகளின் பின்னணியும்.

புலிகளின் தூரநோக்கற்ற செயற்பாடுகளும்  அவர்களால்     மேற்கொள்ளப்பட்ட   கண்மூடித்தனமான படுகொலைகளும் கடைசியில் அவர்களை  அழித்ததோடு மட்டுமில்லாமல் தமிழர்களின் நியாயமான முப்பது வருடத்திற்கும் மேற்பட்ட போராட்டத்தையும் அழித்து தமிழ் மக்களை அடிமைகளான நிலைமைக்கு இட்டுச்சென்றிருக்கிறது.  தலைசிறந்த தமிழ் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் முதியோர் இளையோரென  பேதம் பாராமல் அப்பாவிப்பொதுமக்கள் மாற்று இயக்கப்போராளிகள் என யாரையுமே புலிகள் விட்டுவைக்கவில்லை. விளைவாக

குழப்பம் தரும் அரச அறிக்கைகளால் கேள்விகுறியாகியுள்ள மீள்குடியமர்வு.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் திருகோணமலைப் பகுதிகளில் முகாம்களுக்குள் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறி யாக உள்ளது. சுமார் 3 இலட்சம் வரையான மக்களின் மீள் குடியமர்வு தொடர்பாக அரசாங்கம் கடைப் பிடிக்கும் திட்டமும் சரி, அதன் தரப்பில் இருந்து வெளியிடப்படும் அறிக்கைகள், கருத்துகளும் சரி குழப்பமானதாகவே உள்ளன. இது சர்வதேச சமூகத்தையும், பொதுமக்களையும் திருப்திப்படுத்துவதாக அமையவில்லை என்பதே உண்மை. போர்முடிவுக்கு

நாடு கடந்த அரசாங்கமும் திருத்த முடியாத முட்டாள் புலி ஆதரவாளர்களும் !

காலம் காலமாக கிழக்கு மக்களையும் ஏனைய பிரதேச மக்களையும் தங்களின்  அடிமைகள் போல நடாத்தி வந்த யாழ்ப்பான மேலாதிக்க வர்க்கத்தினரும் புலிகளை வைத்து பிழைப்பு நடாத்தி வந்த புலிப்பினாமிகளும் புலிகளின் வீழ்ச்சியினை பொறுக்க முடியாது புலம்பித்திரிவதும் கிழக்கு மாகாண மக்களின் மீது வெறுப்பினை வெளிக்காட்டிதிரிவதும்  இன்று புலம்பெயர் நாடுகளில் அன்றாட நிகழ்வுகள் ஆகி விட்டன. திருத்த  முடியாத கழுதைகளான இவர்களைப்பார்த்து  கோவப்படுவதை விட இவர்கள் மீது பரிதாபமே

குழந்தைகள் கீழே விழுந்தால் ஏற்படும் பாதிப்புகள் !

‘பூமாதேவிதாங்கிக் கொள்வாள்’ குழந்தைகள் கீழே விழும்போது பெரியவர்கள் கூறும் வார்த்தைகள் இவை. ஆனால் இப் போது நிலைமை தலை கீழ். கீழே விழும் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். அதுவும் பலமாகவே ! பழங்காலத்தில் (சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்புவரை) உயரமான வீடுகள் கிடையாது. தரைகளும் சாணத்தால் மெழுகப்பட்டு இருக்கும். குழந்தைகள் விளையாடும் போது தவறி விழுந்தாலும் அதிகம் அடிபடுவது இல்லை. மேலும் சிறுவயதில் குழந்தைகளின் எலும் புகள் நெகிழும் தன்மை பெற்று [...]

 பக்கம் 2 இல் 1  1  2 »