E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

ஆயுதக்களமா? அரசியல் களமா? அம்மான் முகராசி அரசு செய்யும், நல்ல முடிவு தரும் தனது 43வது அகவை நோக்கி கருணா அம்மான்…

எள்ளி நகைத்து ஏப்பம் விட்டோரைக் – கில்லி போல்
நின்று திணறடித்த சேனைத் தலைவா!
இனவாதத் தீமூட்டிக் குளிர்காய்ந்து வந்தோரின்
முகத்திரை கிழிக்கவே முன்சென்ற தமிழா!
இனம் வாழத் தமிழ்வாழப் புயலாக வன வாசம் புறப்பட்டமறவா!
ஈழப்போரில் குளித்த எங்கள் காவியத் தலைவா!!
43 ஆவது ஆண்டில் காலடி பதிக்கும்
காவிய நாயகனே எங்கள் கருணா அம்மானே!
நாற்திசையும் உன் பெயர் விளங்கும்,

மக்களை மீட்டு தந்த மன்னனுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

மக்களை மீட்டு தந்த மன்னனுக்கு
மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்–இன்று
மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மகிழ்ந்தாட
மன்னவா நீதான் ஐயா காரணம்–தாய்
மண்ணில் தாவரங்கள் தடையின்றி தழைக்க
மதி நுட்பம் தாங்கிய மனிடனே–என்றும்
மனதார கூறுகின்றோம்–நாம்
மாலையுடன் நன்றிகள் பல
மகாராச நீங்கள் என்றும்
மகரந்த மணம் பரப்பி நீங்கள்

எங்களுக்கும் வ(லி)ழியிருக்கு.! (வன்னியில் சிக்கியிருக்கும் ஒரு மானிட அவலையின் குரல் இது)

வெட்ட வெளிகளிலும்
சேறு சகதியிலும்
சுட்டெரிக்கும் வெயிலிலும்
சுருங்கிய வயிறுகளாய்
சிதறிய  சொந்தங்களாய்
சின்னா பின்னமான
சிவப்பான எங்கள்
மண்னுடன் நாங்களும்..