E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

பெல்ஜியம் நாட்டில் அதிவெப்ப காலநிலை:520 பொதுமக்கள் உயிரிழப்பு

பெல்ஜியம் நாட்டில் நிலவி வரும் அதிவெப்ப காலநிலை காரணமாக சுமார் 520 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் ஜூலை மாதம் 4ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு மக்கள் உயிரிழந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

ஜப்பானில் 902 அமெ. குண்டுகள் கண்டுபிடிப்பு

இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய வெடிகுண்டுகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  மொத்தமாக 902  குண்டுகள் பூமியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானின் ஒகினாலா நகரின் ஒரு ஹோட்டலுக்கு அருகில்,  வீதி அபிவிருத்திப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது மண்ணுக்குள் இரும்பு குண்டுகள் புதைந்து கிடந்ததை இவர்கள் கண்டனர்.

உலகைக் கவர்ந்த வினோத ‘சோதிடன் போல்”

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் சிறந்த நட்சத்திரமாகக் கருதப்பட்டவர்…. ஒரு நிமிடம் கூட விளையாட்டுத் திடலில் கால்பதிக்காதவர்…  ஆனால் எந்த அணி தகுதி பெறும் என்பதை அச்சொட்டாகக் கணித்துக் கூறுபவர்…

உலகின் முதல் விமானியில்லா போர் விமானம் “தரானிஸ்”

கண்டம் விட்டு கண்டம் சென்று எதிரி இலக்குகளை மிகச் சரியாகத் தாக்கும்,  எதிரி நாட்டு போர் விமானங்களை வழியில் மறித்துத் தாக்கும் திறன் கொண்ட உலகின் முதல் விமானியில்லா போர் விமானத்தை பிரிட்டன் தயாரித்துள்ளது.

சல்மான் கான், சஞ்சய் தத், அனில்கபூர் உட்பட முன்னணி நடிகர்கள் வருகை – படங்கள் உள்ளே

சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழா கொண்டாட்டங்கள் கொழும்பில் நேற்று கோலாகலமாக ஆரம்பித்தன. சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற சர்வதேச பத்திரிகையாளர் விழாவுடன் இது ஆரம்பமானது.

“குழந்தை வளர்ப்பு” வீடியோ கேமில் மூழ்கி சொந்தக் குழந்தையை ‘பட்டினி போட்டு சாகடித்த’ தென்கொரியப் பெற்றோர்

தென்கொரியாவில் குழந்தை வளர்க்கும் பாவனையில் விளையாடப்படுகின்ற கம்ப்யூட்டர் விளையாட்டொன்றில் மூழ்கிப் போன ஒரு பெற்றோர், தமது சொந்தக் குழந்தை பசியால் வாடி உயிரிழக்க இடம்தந்துள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். [...]

அம்பலமாகிறது மைக்கேல் ஜாக்சன் ரகசியம் !

பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் பற்றிய ஆவணமாக அமெரிக்கப் புலனாய்வுத் துறை (எப்.பி.ஐ.) ஒரு தகவல் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அதில் அவர் மீது சுமத்தப்பட்ட பல்வேறு வழக்குகள் மற்றும் பல விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 679 பக்கங்கள் கொண்ட அந்த ஆவணப் புத்தகத்தில் மைக்கேல் ஜாக்சன் மீதான 1993 மற்றும் 2004ல் நிகழ்ந்த சிறுவர் பாலியல் குற்றச்சாட்டு அதன் விசாரணைகள் அவருக்கு வந்த மிரட்டல்கள் அவரிடம் பணம் பறிக்க நடந்த சூழ்ச்சிகள் போன்ற பல்வேறு ரகசியங்கள் வெ

பெரிய பனிக்கட்டி ஒன்று ஆஸ்திரேலியா அருகே மிதந்தபடி வருகிறது !

கடலில் மிதந்து வந்த ராட்சத பனிக்கட்டி ஒன்றில் டைட்டானிக் கப்பல் மோதி மூழ்கியது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இப்போது இதே போல பல மடங்கு பெரிய பனிக்கட்டி ஒன்று ஆஸ்திரேலியா அருகே மிதந்தபடி வருகிறது. ஆஸ்திரேலியா மேற்கு கடற்கரையில் இருந்து 1700 கிலோ மீட்டர் தூரத்தில் மிதந்தபடி வடக்கு நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அன்டார்டிகா பனிப்பாறைகளில் இருந்து பிரிந்து இது வந்துள்ளது. இதை நாசா மற்றும் ஐரோப்பிய யூனியன் செயற்கை கோள்கள் படம் பிடித்து உள்ளன. இது 140 [...]

மனநலம் குன்றிய நபர் நடத்திய தாக்குதலில் இத்தாலி பிரதமரின் பல் உடைந்தது !

இத்தாலியின் மிலன் நகரில் நடந்த பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்நாட்டுப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீது மனநலம் குன்றிய நபர் நடத்திய தாக்குதலில் பிரதமரின் பல் உடைந்துள்ளது. இத்தாலியில் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள மண்டல தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் விடுதலை மக்கள் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் பெர்லுஸ்கோனி நேற்று மாலை பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய பின்னர் தன்னிடம் ஆட்டோகிராப் கேட்டவர்களுக்கு பெர்லுஸ்

சுவிஸில் பெண்களினால் துன்புறுத்தப்படும் ஆண்களுக்கு அடைக்கலம் வழங்கும் புதிய நிலையங்கள் !

சுவிட்சர்லாந்தில் பெண்களினால் துன்புறுத்தப்படும் ஆண்களுக்கு அடைக்கலம் வழங்கும் நோக்கில் புதிய நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அநேக சந்தர்ப்பங்களில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் மற்றும் துஸ்பிரயோகங்கள் இடம்பெறுகின்ற போதிலும், ஆண்களும் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜெர்மனிய மொழி பேசும் சுவிட்சர்லாந்து கான்டன்களில் முதல் முறையாக இவ்வாறான நிலையங்கள் இயங்க உள்ளன. திருமண பந்தத்தில் இணைந்ததன் பின்னர் ஆண்கள்

ESPN நிருபரை துரத்தி துரத்தி நிர்வாணப்படம் எடுத்த நபர்… ஆஹா !!

உலகின் மிகப்பெரிய செய்தி ஊடகமான ருபர்ட் முர்டாக்கின் இ.எஸ்.பி.என். செய்தியாளர் எரின் ஆண்ட்ரூஸ் என்பவரை மைக்கேல் பாரட் என்பவர் துரத்தித் துரத்திச் சென்று மறைவிலிருந்து நிர்வாண வீடியோக்களை எடுத்துள்ளார். இதனை அவர் லாஸ் ஏஞ்சலஸ் நீதிமன்றத்தில் விசாரணையின் போது ஒப்புக் கொண்டார். கடந்த ஆண்டு இ.எஸ்.பி.என். செய்தியாளர் ஆண்ட்ரூஸ் சென்று வந்த 3 நாடுகளிலும் அவரைப் பின் தொடர்ந்து சென்ற பாரட், செய்தியாளர் தங்கியிருக்கும் விடுதியிலேயே அவருக்கு அடுத்த அறையில்

உலக வர்த்தக நிலையத்தின் சிதைவுகளினால் உருவாக்கப்பட்ட யுத்தக் கப்பல் !

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மான்ஹாற்றன் பகுதியில்  அமைந்திருந்த உலக வர்த்தக வலயத்தின் இரட்டைக் கோபுரங்கள் 2001ம் ஆண்டு செப்ரெம்பர் 11ம் திகதி பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குள்ளாகியது. இந்தத் தாக்குதலினால் தரைமட்டமாகிய உலக வாத்தக வலயத்தின் உருகிய 7.5 தொன் எடையுள்ள இரும்பிலிருந்து  அமெரிக்கா ஒரு பிரமாண்டமான  யுத்தக் கப்பலைத் தயாரித்துள்ளது. ஒரு பில்லியன்  டொலர் செலவில் இந்தக் கப்பல் லுயிசியானாவல் கட்டப்பட்டது. போர் விமானம் தரையிறக்கக் கூடிய வசதி

எந்த விரலாவது ஈரானை சீண்டிப்பார்க்க முயற்சிக்குமானால் அது வெட்டப்படும் !

ஈரானுக்கு எதிரான சர்வதேச தடைகளால் அந்நாட்டுக்கு எவ்விதப் பாதிப்புமில்லை என அன் நாட்டு ஜனாதிபதி மஃமூது அஹ்மது நஜாத் தெரிவித்தார். தொலைக் காட்சியொன்றில் அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஈரான் இரண்டாவது யுரோனிய செறிவூட்டல் நிலையம் ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பில் கண்டணம் தெரிவிக்கும் வகையில் வாக்கெடுப்பொன்றை நடத்தி ரஷ்யா தவறொன்றை இழைத்துள்ளதாக அவர் கூறினார். மேலதிக அணுசக்தி தளங்களை நிர்மாணிப்பதற்கான தனது திட்

செருப்பெடுத்தவனுக்கு செருப்பாலே பதிலடி ! வினை விதைத்தவன் வினை அருப்பான் !

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பாக்தாத் வந்தபோது அவர் மீது ஷூ வீசி உலகை அதிர வைத்த ஈராக்கிய பத்திரிக்கையாளர் முன்டாசர் அல் ஜெய்தி, பாரீஸ் சென்றபோது அவர் மீது ஷூ வீசப்பட்டது. செவ்வாய்க்கிழமை பாரீஸ் வந்த முன்டாசர் அங்கு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் மீதே ஷூ வீசப்பட்டது. ஈராக்கைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவரே ஜெய்தி மீது ஷூ வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தன்னை நோக்கி வந்த ஷூ [...]

பிரான்ஸ் புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பறித்த புலி ஆதரவாளர்கள் 21 பேர் கைது !

பிரான்ஸில் வாழுகின்ற தமிழர் சமூகத்திடம் மிரட்டிப் பணம் பறித்த குற்றச் சாட்டின் கீழ் புலி ஆதரவாளர்கள் 21 பேருக்கு பிரஞ்சு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்ற பெயரில் இயங்கிய புலிகளின் அமைப்பை கலைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான போருக்காக பல லட்சக்கணக்கான யூரோக்களை இந்தக் குழுவினர் பிரான்ஸில் வாழும் தமிழ் மக்களிடம் மிரட்டிச் சேகரித்ததாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்

43வது அகதிகள் படகாக ஆஸ்ரெலியா நோக்கி 41 அகதிகளுடன் வந்த படகை ஆலிய கடப்படையினர் மீட்டுள்ளனர்.

41 அகதிகளுடன் வந்த படகு ஒன்றை ஆஸ்திரேலியக் கடற்படையினர் வடக்கு ஆஸ்திரேலியா அருகே அஷ்மோர் தீவு அருகே மடக்கி தடுத்து நிறுத்தியுள்ளனர். அனேகமாக இவர்களும் இலங்கையைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கக் கூடும் எனத் தெரிகிறது. இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவை நோக்கி வந்துள்ள 43 வது அகதிகள் படகு இது என்பது குறிப்பிடத்தக்கது. கண்காணிப்பு விமானம் மூலம் இந்த படகு வருவது தெரிய வந்தது. இதையடுத்து கடற்படையினர் விரைந்து சென்று தடுத்து நிறுத்தினர். அஷ்மோர் தீவுக

உலகின் அதிகாரம் மிக்கவர்கள் பட்டியிலில் போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவர் !

அமெரிக்காவின் போர்ப்ஸ் சஞ்சிகையால் வெளியிடப்பட்டுள்ள உலகின் அதிகாரம் மிக்கவர்கள் பட்டியலில் மென்ஸிக்கோவன் பிரபல போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவர் ஜோகுயின் குஷ்மன் 41 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். நேற்று முன்தினம் போர்ப்ஸ் சஞ்சிகையனால் வெளியிடப்படட 67 பேரை உள்ளடக்கய இப்பட்டியலில் ரஷ்ய ஜனாதிபதி நிகொலஸ் சார்கோஸி மற்றும் வெனிசூலா ஜனாதிபதி ஹகோ சாவேஷ் போன்ற தலைவர்களுக்கு முன்னனில் குஷ்மன் 17வது இடத்திலுள்ளதாக தெரிக்கப்படுகிறது.

மலேசியாவில் கும்பலொன்றினால் கடத்திச் செல்லப்பட்ட 2 இலங்கையர்களை மலேசிய பொலீசார் மீட்டெடுத்துள்ளனர்.

கடத்திச் சென்று சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு இலங்கையர்களை மலேஷிய காவல்துறையினர் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இரண்டு இலங்கையர்களை கடத்திய நபர்களே முன்னர் 16 வயது இலங்கை இளைஞர் ஒருவனையும் கடத்திச் சென்று கப்பம் கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மலேஷியாவின் சீட்டாபார்க்கில் உள்ள தொடர்மாடிக் கட்டிடமொன்றில் கடத்தப்பட்டவர்களை தடுத்து வைத்திருந்ததாகத் தெரியவருகிறது. 57 மற்றும் 63 வயதான இரண்டு இலங்கையர்களையே கடத்தல்கள் காரர்கள்

30 ஆண்டுகளாக அடக்கம் செய்யாமல் இருந்த பெண்னின் பிணம் !

சவுதி அரேபியாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் 1979-ம் ஆண்டு நர்சாக பணியாற்றி வந்தவர் ஹெலன் ஸ்மித். இவர் கட்டிடம் ஒன்றில் தவறி விழுந்து உயிர் இழந்தார். அப்போது அவரது வயது 23. ஆனால் அவர் சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை ரான்ஸ்மித் புகார் செய்தார். ஹெலன்ஸ்மித் டென்மார்க் கப்பல் கேப்டன் ஒருவர் அளித்த விருந்தில் கலந்து கொண்டதாகவும் அப்போது அவர் கற்பழித்து கொல்லப்பட்டதாகவும் புகார் கூறினார். எனவே அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என [...]

சோமாலியாவில் 112 வயதுடைய முதியவர் ஒருவர் 17 வயதுடைய யுவதி ஒருவரை திருமணம் செய்துள்ளார் !!

சோமாலியாவில் 112 வயதுடைய முதியவர் ஒருவர் 17 வயதுடைய யுவதி ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய சோமாலியாவில் உள்ள கிராமமொன்றில் நடைபெற்ற இந்த திருமண வைபவத்தில் பலர் கலந்து கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அஹமட் முஹமட் டோர் என்ற 112 வயது நபரே இவ்வாறு 17 வயது யுவதியை திருமணம் செய்து கொண்டுள்ளார். குறித்த நபருக்கு ஏற்கனவே ஐந்து மனைவிகளும், 18 பிள்ளைகளும் இருப்பதாகத் தெரிவிக்

 பக்கம் 4 இல் 1  1  2  3  4 »