கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் சேதமடைந்த பௌத்த விகாரைகளையும் மட்டக்களப்பு நகரிலுள்ள மங்கள ராம பௌத்த விகாரையையும் உடனடியாக புனரமைத்து தருமாறு மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் பிரதம சங்க நாயக்கரும் மட்டக்களப்பு மங்கள ராமயவின் விகாராதிபதியுமான அம்பியிட்டிய சுமணரத்தின தேரோ இன்று (5.8.2010 வியாழக்கிழமை) காலை தொடக்கம் மட்டக்களப்பு நகரில் சாகும் வரையிலான உண்ணாவிரதொன்றை ஆரம்பித்துள்ளார்.






