E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் சமய அநுட்டானங்களுடன் நேற்று ஆரம்பம்

இலங்கையின் ஆளும் கட்ட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளமன்ற தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நேற்று சமய அனுட்டானங்களுடன் அநுராதபுரத்தில் ஆரம்பமாகியது.

நவீன மின்னணு அடையாள அட்டைகள் விரைவில் அறிமுகம்

இலங்கையில் 2010ம் ஆண்டு இறுதிப்பகுதியிலிருந்து நவீன மின்னணு அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஏ.ஜி.தர்மதாச தெரிவித்துள்ளார்.

புதியதோர் இலங்கையை கட்டியெழுப்ப முஹம்மது நபியின் போதனை கைகொடுக்கும் – ஜனாதிபதி

சகிப்புத்தன்மை புரிந்துணர்வு நல்லிணக்கம் என்பவற்றுடன் கூடிய புதியதோர் இலங்கையைக் கட்டியெழுப்ப முஹம்மது நபி அவர்களால் போதிக்கப்பட்ட சகோதரத்துவம் கைகொடுக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இதன் மூலம் இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கும் உதவ முடியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மீலாத் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அரசியல் தேசியம் என்பவற்றுக்கு அப்பால் தமிழ் மக்களுக்குத் தேவைகள் உள்ளன – முன்னாள் எம்.பி.தங்கேஸ்வரி

அரசியல் தேசியம் என்பவற்றுக்கு அப்பால் தமிழ் மக்களுக்குத் தேவைகள் உள்ளன என்றும்  தமிழ் மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் அரசாங்கத்தை ஆதரிக்கத் தீர்மானித்ததாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டு. மாவட்ட வேட்பாளருமான க. தங்கேஸ்வரி தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் புதிதாக 50 நீதி மன்றங்கள் அமைக்கப்படும்

புதிதாக 50 நீதி மன்றங்களை அமைக்கும் பணியை சட்ட மறுசீரமைப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.இதற்கு 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதன்போது 3 மேலதிக நீதி மன்றங்கள்,16 மாவட்ட நீதிமன்றங்கள்,19 நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் 12 சுற்றுலா நீதிமன்றங்கள் என்பன அமைக்கப்படும்.

அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த்தவால் தேசியப் பட்டியல் பாராளமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் கையளிப்பு.

அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை இன்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திடம் கையளித்தார்.
இவ்வைபவம் தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 27ம் திகதி சனிக்கிழமை

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 27ம் திகதி சனிக்கிழமை முதல் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இரு தினங்கள் நடைபெறவுள்ளது.
இந்த உற்சவத்தை முன்னிட்டு ஆரம்ப ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் நெடுந்தீவு பங்குத் தந்தைமார் ஆகியோரைக் கொண்ட குழுவினர் இன்று வியாழக்கிழமை நெடுந்தீவில் இருந்து கச்சதீவுக்குப் புறப்படுகின்றனர்.

வேட்புமனுத் தாக்கல் நளை முடிவு

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் நாளை (26/02/2010) நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைகிறது. வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் கடந்த 19 ஆம் திகதி ஆரம்பமாகியது.
22 மாவட்ட செயலகங்களில் தெரிவத்தாட்சி அதிகாரிகளின் முன்னிலையில் இந்த நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

இந்தியா பாகிஸ்தான் இடையிலான முதல்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

பயங்கரவாத ஒழிப்பு மற்றும் மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கை உள்ளிட்டவை மையமாக வைத்து இந்தியா பாகிஸ்தான் இடையிலான முதல்கட்ட பேச்சுவார்த்தை  இன்று  நடைபெறுகிறது.
இரு நாட்டு வெளியூறவு செயலர்கள் நிருபமாராவ் ( இந்தியா ) சல்மான் பஷீர் ( பாகிஸ்தான் ) இருவரும் சந்தித்து பேசுகின்றனர். மும்பை தாக்குதல் நடந்து 14 மாதங்களுக்கு பின்னர் இந்த பேச்சு நடக்கிறது.

இலங்கைக்கான பயணத் தடையை சவுதி நீக்கம்

இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதற்கு சவூதிப் பிரஜைகளுக்கு விதித்திருந்த கட்டுப்பாட்டை சவூதி அரேபியா அரசாங்கம் தளர்த்தியுள்ளது.
சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

ஜீ.எஸ்.பீ. ப்ளஸ் இன்னும் நிறுத்தப்படவில்லை.

ஜீ.எஸ்.பீ. ப்ளஸ் வரிச்சலுகை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கூற்றில் எவ்வித உன்மையும் இல்லை என்றும் அந்தச் சலுகை தொடார்ந்தும் கிடைத்து வருவதாகவும் சர்வதேச வர்த்தக துறை அமைச்சர்  பேராசிரியர் ஜி.ல்.பீரிஸ் தெரிவித்தார்.
இந்தச் சலுகை பெப்ரவரி 15ஆம் திகதி முதல் தொடார்ந்து ஆறு மாத காலத்துக்கு கிடைக்கும் என  அவார் குறிப்பிட்டார். இந்தச் சலுகையை மேலும் நீடிப்பது குறித்து பரிசீலிப்பதற்கு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

வரலாறு படைத்தார் சச்சின்.

இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர் அபாரமாக விளையாடி ஒரு நாள் போட்டியில்  இரட்டைச் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் ஐசிசி தரவரிசையில் 2-வது இடத்தை இந்தியா தக்கவைத்துக் கொண்டது.

பாராளமன்ற சபாநாயகரின் வாசஸ்தலத்துக்கு அருகில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதியுயர் பாதுகாப்பு வலயப்பகுதி ஆகிய பாராளமன்ற சபாநாயகரின் வாசஸ்தலத்தருகே சடலமொன்று பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
அருகிலுள்ள வாய்க்கால் ஒன்றிலேயே அழுகிய நிலையிலுள்ள இச்சடலம் காணப்பட்டது.பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக தகவல்கள் விரைவில்..

அபிவிருத்தி யுகம் ஆரம்பம்

நாட்டுக்குத் தேவையான அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்தத் தவறியதால் நாடு 40 வருட கால பலனை இழந்து நிற்கிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அபிவிருத்தியாகட்டும், யுத்தமாகட்டும் நாம் போதிய நிதியைக் கையில் வைத்துக்கொண்டு ஆரம்பிக்கவில்லை. உள்ளதை வைத்தே தொடங்கினோம். மொரகஹகந்த நீர்ப்பாசன திட்டத்தை 500 மில்லியன் ரூபாவை வைத்தே ஆரம்பித்தோம். எனினும் இதுவரை 6000 மில்லியன் ரூபா நிதியைச் செலவு செய்துள்ளோம் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

நாளை ஸ்பானிய நாட்டு உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட யான் ஓய பாலம் திறப்பு

திருகோணமலயையும் புல்மோட்டையையும் இணைக்கும் புதிய யான் ஓய பாலமானது, சுமார் 480 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக நாளை பிரதமரால்  திறக்கப்படும்.

கிளிநொச்சி நீதி மன்றம் மார்ச் முதல் இயங்கும்

கிளிநொச்சி நீதி மன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
நீதிமன்ற சேவை ஆணைக்குழுவினால் கிளிநொச்சிக்கான மாவட்ட நீதிபதியாக எஸ். சிவகுமாரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் கிளிநொச்சி நீதி மன்றக் கட்டடப் பணிகள் முடிவடையும் வரை அவர் தற்காலிகக் கட்டம் ஒன்றில் பணியாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

வடக்கில் நேற்று 336 குடும்பங்களைச் சோந்த 1161 போர் மீள்குடியேறறம்

மோதல்கள் காரணமாக வடக்கில் இடம்பெயர்ந்த 336 குடும்பங்களைச் சோர்ந்த 1161 போர் நேற்று மீள்குடியேற்றப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.கோண்டாவில் பிரதேசத்தில் 319 குடும்பங்களைச் சோர்ந்த 1093 பேரும் கிளிநொச்சி மாவட்ட மாந்தையில் 17 குடும்பங்களைச் சோர்ந்த 68 பேரும் மீள்குடியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ததேகூவிலிருந்து விலகிய தங்கேஸ்வரி குழுவினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட கே.தங்கேஸ்வரி உள்ளிட்ட சிலர் நேற்று ஜனாதிபதியைச் சந்தித்துள்ளனர்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள தமிழ் வேட்பாளர்கள் கைச்சாத்திட்டதன் பின்னர், இது தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டே ஜனாதிபதியைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

பேராதனை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா வரும் 25ம் திகதி.

இவ்வருடத்துக்கான பேராதனைப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
2,347 பேருக்கு இம்முறை பட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி பிரேமதாச உடகம தலைமையில் ஜிம்னாசியம் மண்டபத்தில் காலை 8.00 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் ஐ.ம.சு.மு.யின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 4.00 மணிக்கு அநுராதபுரத்தில் நடைபெற உள்ளதாக முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.
வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த மறுதினம் ஐ.ம.சு. முன்னணி சார்பாக போட்டியிடும் சகல வேட்பாளர்களும் அநுராதபுரத்தில் ஒன்று கூடி ஜனாதிபதி முன்னிலையில் வாக்குறுதி அளிக்க உள்ளனர்.

 பக்கம் 2 இல் 1  1  2 »