E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

பாதுகாப்பு செயலர் கோட்டாபய நேற்று முல்லைத்தீவுக்கு விஜயம்

பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் அடங்கிய உயர் மட்டக் குழுவினர் நேற்று (21)  முல்லைத்தீவு பிரதேசத்துக்கு விஜயம் செய்தனர். இவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகள், மக்களின் மேம்பாடு,  மீள் குடியேற்றம் மற்றும் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தனர்.

நித்யானந்தாவுடன் தேவ‌ கௌடா கட்சி எம்எல்ஏ சந்திப்பு

பாலியல் வழக்கில் சிக்கி, கைதாகி, ஜாமீனில் வெளியே வந்துள்ள நித்யானந்தாவை மாஜி பிரதமர் தேவ கௌடாவின் கட்சியின் முக்கியத் தலைவரான பாலகிருஷ்ணா சந்தித்துப் பேசினார். பெங்களூர் மாகடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான இவர் மதசார்பற்ற ஜனதா தளத்தின் முன்னணி தலைவராவார்.

தீவிரவாதிகளுக்கு ஆலோசனை; பேச்சு சுதந்திரத்தைப் பாதிக்கும் : அமெரிக்கா

பயங்கரவாத குழுக்களுக்கு தனிப்பட்டவர்களோ அல்லது குழுக்களோ, ஆலோசனை வழங்குவது பேச்சு சுதந்திரத்தை பாதிக்கும் செயல் என அமெரிக்க உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாபதி ஒபாமாவின் அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு எதிராகத் தீவிர கவனம் செலுத்தி வருவதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

காணிக்கச்சேரிகள் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் வகையில் நடவடிக்கை

கிளிநொச்சி,  முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்களை அவர்களது சொந்தக் காணிகளில் குடியமர்த்துவதற்கு ஏதுவாக காணிக்கச் சேரிகளை உடனடியாக இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படவு ள்ளதாக மீள்குடியேற்ற பிரதி யமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

புதுடில்லியிலிருந்து இன்று நாடு திரும்பினார் ஜனாதிபதி

இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி இன்று மாலை 4.15 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார்.

வங்கக் கடலில் தாழமுக்கம்: புயல் சின்னமாக மாறும் அபாயம்

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள சிறிய தாழமுக்கம் காரணமாக புயல் சின்னம் உருவாகும் அபாயம் உள்ளபோதும் எவ்வகையிலும் இலங்கைக்கு பாதிப்புகள் ஏற்படமாட்டாது என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள இத்தாழ முக்கம் காரணமாக தமிழ் நாட்டுக்கே அதிகளவு மழை பெய்யும். இலங்கைக்கு தென் மேற்கு பருவ பெயர்ச்சி மழையுடன் காற்று சற்று வேகமாக வீசும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

மத்திய கிழக்கு தொழில்வாய்ப்பு:2010 முதற்காலாண்டில் 890 மில். டொலர் வருமானம்

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்கள் சென்றுள்ளதன் மூலம் 2010 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் வெளிநாட்டு செலாவணியாக 890  மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடைத்துள்ளது.  அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுச் செல்பவர்களின் எண்ணிக்கையும் 22  சதவீதமாக அதிகரித்துள்ளது என பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.

தென் மேல் பருவப் பெயர்ச்சி மழை இன்னும் சில தினங்களில்

தென் மேல் பருவப் பெயர்ச்சி மழை அடுத்துவரும் இரண்டொரு தினங்களில் ஆரம்பிக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளர் கே. எச். எம். எஸ். பிரேமலால் நேற்றுத் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டைச் சூழவுள்ள கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழர்கள் விரைவில் மறுகுடியமர்த்தப்படுவர் : தி.மு.க. அணி எம்.பி.க்களிடம் ஜனாதிபதி ராஜபக்ஷே உறுதி

முள்வேலி முகாமிலுள்ள தமிழர்கள் விரைவில் மறுகுடியமர்த்தப்படுவர் என தி.மு.க.  அணி எம்.பி.க்களிடம் இலங்கை  ஜனாதிபதி ராஜபக்ஷே உறுதியளித்தார்.

பிபிஸி ‘ஹார்ட்டோக்’ இற்கு பொன்சேகா இரகசியப் பேட்டி! – லக்ஷ்மன் ஹுலுகல்ல

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்ச்சியாக தேசத் துரோகமான அறிக்கைகளை விடுத்து வருகிறார். அவருக்கு என்ன தண்டனை வழங்குவது என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதித்துறையினரின் பொறுப்பாகுமென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.

போபால்-விஷ-வாயு-கசிவு-வழக்கு குற்றவாளிகளுக்கு-2-ஆண்டு-சிறை தீர்ப்பு

போபால் விஷ வாயு கசிவு வழக்கில் 26  ஆண்டுகளுக்குப் பின் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், குற்றவாளிகள் என அறிவித்த 8 பேருக்கு தலா 2 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் யூனியன் கார்பைடு என்ற நிறுவனத்தில் இருந்து 1984 டிசம்பர் 2 ஆம் தேதி நள்ளிரவுக்கு மேல் விஷ வாயு  கசிந்தது.இதில்  ஆயிரக்கணக்கானோர்  உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் நிரந்தரமாக பாதிக்கப்பட்டனர்.

அதிகூடிய வாக்கு பெற்றோருக்கு சுதந்திரக் கட்சி செயற்குழுவில் இன்று விருது வழங்கி கெளரவம்

ஜனாதிபதி அரசியல் வாழ்வில் குதித்து இன்று திங்கட்கிழமை 7ம் திகதியுடன் 40  வருடங்கள் பூர்த்தியடைகின்றன.
இதையிட்டு இன்று செயற்குழு கூட்டத்தில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுக் கொடுத்த அமைப்பாளர்களுக்கும் பாராளுமன்றத் தேர்தலின் போது அதிகூடிய வாக்குகள் மற்றும் விருப்பு வாக்குகளைப் பெற்றோர்களுக்கும் விசேட விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட விருப்பதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

மாளிகாகந்த நீதிமன்ற சிறையிலிருந்து 11 பேர் தப்பி ஓட்டம்

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில், விசேட தடுப்புப் பிரிவின் கீழ் வைக்கப்பட்டிருந்த 10 கைதிகளும் ஒரு சந்தேக நபரும் தற்காலிக சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகச் சிறைச்சாலைத் திணைக்கள பேச்சாளரும் ஆணையாளருமான கெனித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இம்மாதம் யசூசி அகாஸி இலங்கை வருகை

ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாஸி இம்மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து அகாஸி ஆராய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத கட்டிடங்கள் சட்ட விரோதமாக அகற்றப்படக் கூடாது : எஸ்.பி

சட்ட விரோத கட்டிடங்களை அகற்றும் போது அது சட்ட விரோதமாக இருக்கக்கூடாது என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கா தெரிவித்தார்.
ஹரிஸ்பத்துவ தொகுதியில் உள்ள அளவத்துகொட என்ற இடத்தில், அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு வைபவம் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர்மேலும் தெரிவிக்கையில்,

ஆர்வலர்களை நாடுகடத்த நடவடிக்கை

மத்திய கிழக்கிலுள்ள காசா பகுதிக்கு உதவிப் பொருட்களை கொண்டு செல்ல முயன்ற ஐயர்லாந்துக் கப்பல் ஒன்றிலிருந்து சனிக்கிழமை கைது செய்யப்பட்ட 19 பேரை நாடு கடத்தும் நடவடிக்கைகளை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.
ரேச்சல் கோரி என்கிற அக்கப்பலில் இருந்த பாலத்தீன ஆதரவு செயற்பாட்டாளர்கள் 11 பேரும், கப்பல் சிப்பந்திகள் 8 பேரும் இஸ்ரேலில் இருந்து விமானம் மூலமாகவோ அல்லது ஜோர்டன் நாட்டின் வழியாகவோ நாடு கடத்தப்படுகிறார்கள்.

செல்போனில் ஈசிஜி எடுத்து டாக்டருக்கு அனுப்பலாம்!

 மேஸ்ட்ரோஸ் மெடிலைன் சிஸ்டம்ஸ் நிறுவனம் ஒரு அதி நவீன பிளாக்பெர்ரி செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது செல்போனாக மட்டுமல்லாமல், ஈசிஜி எடுத்துப் பார்க்கும் வசதியையும் கொண்டுள்ளது என்பதே இதன் விசேஷம்.

பலனளிக்கும் வகையில் பேச்சுவார்த்தை

ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடை யிலான பேச்சுவார்த்தை நாளை நடைபெறவிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கின்றது. இப் பேச் சுவார்த்தைக்கான அழைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தனுக்கு அனுப்பப்பட்டுள் ளது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமத்தில் நடந்தது விபத்தே : காவல்துறை திட்டவட்டம்

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு ஒரு விபத்துதான் என்றும், அதுதொடர்பாக நபர் ஒருவர் பிடிபட்டுள்ளார் என்றும் கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. அஜய் குமார் சிங் தெரிவித்தார்.
மேலும்,    துப்பாக்கியால் குறிவைக்கப்பட்டது ஸ்ரீ.ஸ்ரீ.ரவிசங்கர் அல்ல;  தெருக்களில் அலைந்துகொண்டிருந்தா நாய்களே என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி தலைமையிலான குழு தமிழ் கூட்டமைப்புடன் திங்களன்று பேச்சு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும்  தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் எதிர்வரும் ஏழாம் திகதி  திங்கட்கிழமை  பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக  அரசாங்க வட்டாரங்களிலிருந்து நம்பகமாகத் தெரியவருகிறது.

 பக்கம் 2 இல் 1  1  2 »