E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

வவுனியா புனர்வாழ்வு நிலையம் : க.பொ.த. (உ/த) பரீட்சைக்கு 362 பேர் தோற்ற ஏற்பாடு

ஒகஸ்ட் 09ம் திகதி ஆரம்பிக்கப்படவிருக்கும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு இம்முறை புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள 362  முன்னாள் புலி உறுப்பினர்கள் தோற்றுகின்றனரென புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

எரிபொருளை 24 மணி நேரமும் கரையேற்றுவதற்கு விசேட ஏற்பாடு

கப்பல் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்யும் எரிபொருளை கடற்படையின் பாதுகாப்புடன் 24 மணித்தியாலமும் கரையேற்றுவதற்கு பெட்ரோலிய வள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் கடந்த காலங்களில் விரயமான கோடிக் கணக்கான ரூபா நிதியை மீதப்படுத்த முடியுமென அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

BTI பக்றீரியா அடுத்த வாரம் சந்தையில்…

டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கென உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பி.ரி.ஐ. (Bacillus Thuringenesis Sub Species Isrealensis) பக்aரியா இம்மாத இறுதியில் சந்தைக்கு விடப்படும் என்று கைத்தொழில் தொழில்நுட்ப நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எச்.எம்.முபாரக் நேற்றுத் தெரிவித்தார்.

போலி மருந்தகர்கள் பிடிபட்டால் சிறை : கட்டுப்பாட்டுச் சபை தெரிவிப்பு

போலி மருந்தகங்கள் (பாமஸிகள்), போலி மருந்தகர்கள் (பாமஸிஸ்ட்கள்) மற்றும் அபாய ஒளடத சட்டத்தை மீறுவோர் பிடிபடும் பட்சத்தில் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும் என ஒளடத கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் கே.கமகே தெரிவித்தார்.
மேற்கத்தைய மருந்து வகைகளைச் சிலர் போதைக்காகவும் முறைகேடாகவும் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து அபாயகர ஒளடத சட்டத்தை கடுமையாகப் பின்பற்ற நடடிக்கை எடுக்கப் போவதாகவும் கமகே தெரிவத்தார்.