E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு நிவாரணம் அதிகரிப்பு

இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கும் உணவு நிவாரணத்தை அதிகரிக்க உள்ளதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் நிவாநயகமூர்த்தி முரளிதரன் கூறினார்.உலக உணவுத் திட்டத்தினூடாக இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதோடு இதனை அதிகரிக்க உலக உணவுத் திட்டம் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வடக்கின் அபிவிருத்திக்கு புலிகளின் நிதியைப் பயன்படுத்துவதில் தவறில்லை: கெஹெலிய

வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்ற போது ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேற்படி தெரிவித்தார்.

சிறந்த சுகாதாரத் துறை கொண்ட நாடாக இலங்கையை மாற்றுவோம்: ஜனாதிபதி

இலங்கையை 6  வருடகாலப் பகுதிக்குள் சிறந்த சுகாதாரத் துறையை கொண்ட நாடாக மாற்றியமைக்கப் போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று இரத்தினபுரியில் தெரிவித்தார்.
இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பிரசவ வார்டினை திறந்து வைக்கும் போது மேற்படி ஜனாதிபதி தெரிவித்தார்.

களனி சுகாதார பொறுப்பதிகாரிகளுக்கு பிரதியமைச்சரின் சூளுரை

டெங்கு நோயினால் களனி பிரதேசத்தில் மரணம் சம்பவிக்குமாயின் உரிய சுகாதார பொறுப்பதிகாரிகளை மரணம் சம்பவித்த வீட்டுவாசலில் உள்ள மரத்தில் கட்டி வைப்பேன் என நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா சூளுரைத்துள்ளார்.
பிரதேச சபைக் கட்டிடத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது மேற்படி தெரிவித்தார்.