E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

உழைக்கும் வர்க்கத்தினரே எமது நாட்டின் கொடைகள் – அமைச்சர் கருணா அம்மான்

எமது நாட்டு பயங்கரவாத பிரச்சனை என்பது எமது நாட்டில் உழைக்கும் வர்க்கத்தினருக்கு தடையாக இருந்தது தற்போது எமது நாட்டின் தலைவரும் அதிமேதகு ஜனாதிபதியுமான மகிந்த ராஜாபக்ச அவர்களினால் அழிக்கப்பட்டுகொண்டே வருகிறது விரைவில் அது நமக்கு நல்ல முடிவை தரும் நாம் அனைவரும் முதலில் எமது நாட்டிக்காக உழைக்க  கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் நமது கடினமாக உழைப்பதால் மாத்திரமே எமது சமூகத்தை நல்ல சமூகமாக மாற்ற முடியும் எமது நாட்டின் அபிவிருத்தியின் மூலகற்களாக இருப்பவர்களும் இந்த  உழைக்கும் வர்க்கத்தினர்தான். எனவே எமது நாட்டு மக்கள் அனைவரும் ஏதோ ஒன்றை உழைத்து வாழ்பவர்களாக மாறவேண்டும் மாற்றப்படவேண்டும் என இன்றைய தொழிலாளர் தினத்தில் வினையமாக கேட்டுக்கொள்கின்றேன்.அத்துடன் வடக்கு வாழ் தொழிலாளர் உறவுகள் பயங்கரவாத பிரச்சனையால் சுதந்திரமான இந்த தொழிலாளர் தினத்தை கொண்டாட முடியாததை இட்டு மனவேதனை அடைகின்றேன் எதிர்வரும் காலங்களில் அவர்களுக்கு சுதந்திரமான தொழிலாளர் தினத்தை கொண்டாட என்னால் ஆன சகல நடவடிக்கைகளையும் மேற்க்கொண்டு வருகின்றேன். இன்றைய நாளில் அனைத்து தொழிலாளர்களுக்கும் எனது உள்ளம் கனிந்த தொழிலாளர் தின வாழ்த்துக்கள்…

“உழைப்போம் வாழ்வோம்
உழைத்து வாழ்வோம”

Comments are closed.