E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

த.ம.வி.பு. ஆரையம்பதி பிரதேச அலுவலகத்தில் 3 சிறுவர்கள் பொலிஸாரால் மீட்பு !

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச அலுவலகத்தில் தொடர்ந்தும் தங்கியிருந்த 3 சிறுவர்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் இவர்கள் மூவரும் சர்வோதய பண்ணையில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை காத்தான்குடி பொலிஸ் சிறுவர் ,பெண்கள் பிரிவு இவ் அலுவலகத்தில் மேற்கொண்ட சோதனையின் போது 18 வயதுக்கும் குறைந்த 3 சிறுவர்கள் அங்கே தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கரடியனாற்றைச் சேர்ந்த கணேசமூர்த்தி சுரேந்திரன் ,கல்லடியைச் சேர்ந்த பரசுராமன் மயூரன் ,மற்றும் அன்புவழிபுரத்தைச் சேர்ந்த நாகலிங்கம் டிசாந்தன் ஆகியோரே மேற்படி சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் இச்சிறுவர்களும் சந்தேக நபரான குறிப்பிட்ட அலுவலகப் பொறுப்பாளரும் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் வரை சத்துருக்கொண்டான் சர்வோதயப் பண்ணையில் தங்க வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments are closed.