E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

மட்டக்களப்பில் ஜானாதிபதியின் முதலாவது பிராசார மேடையில் அமோக வரவேற்புடன் நாமல் ராஜபக்ஷ !

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பில் இடம்பெற்ற சிறீ லங்கா சுதந்திரக்கட்சியின் முதலாவது பிரசார கூட்டத்தில் இலங்கையின் ஜானாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாளை இளைஞர்கள் அமைப்பின் தலைவருமாகிய நாமல் ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர், மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் நாமல் ராஜபக்ச கலந்துகொண்டார். இவ் பிரசார கூட்டத்திக்கு தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சரும் சிறீ லங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித் தலைவருமாகிய வி.முரளிதரன் (கருணா அம்மான்) மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி, முன்னாள் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌளான மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.எம் ஹிஸ்புல்லா என பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். மட்டக்களப்பில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்களை நாமல் ராஜபக்ஷ சந்தித்தார் அதன் பின் ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் பெருந்திரளான முஸ்லீம் மக்கள்  பட்டாசு கொழுத்தி வரவேற்றனர். பிரசார கூட்டத்தில் உரை நிகழ்த்திய அமைச்சர் கருணா அம்மான் ஜானாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் வகையில் ஜானாதிபதியின் புதல்வருக்கு கௌரவம் அளித்து பிரந்திரளான மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். நாங்கள் இன்று எமது நாட்டின் ஜானாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவேண்டிய பாரியதொரு கடமைப்பாட்டில் உள்ளோம், எமது எதிர்கால சநத்தினரின் எதிர்காலத்தை வளமுள்ள எதிர்காலமாக மாற்றும் திறமையும் திறனும் மகிந்த ராஜபக்சவிடம் மாத்திரமே உள்ளது இதற்கான அபிவிருத்தியினை நாம் இவரின் ஆட்சிக் காலத்திலே பெற்றுள்ளோம். இன்று  கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்கள் முஸ்லீம்கள் என பாகுபாக்கு பார்க்கமல் ஒவ்வொரு முக்கியமான துறைகளுக்கும் முஸ்லீம் அமைச்சர்களை நியமித்துள்ளார் என்பது முஸ்லீம் சமூகம் மீது அவர் வைத்துள்ள நன்மதிப்பை எடுத்துக்காட்கிறது எமது அனைவரினதும் சமூகமும் மேலும் அபிவிருத்திப் பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டுமானால் மீண்டும் எமது நாட்டின் ஜானாதிபதியாக அதி உத்ம ஜானாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் வரவேண்டும் அதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக நின்று பாடுபடவேண்டும் இதற்கு சாவலாக அமைந்துள்ள அனைத்தையும் நாம் முறியடிக்க வேண்டும் என கூறினார். இதன் பின் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ, “தந்தையின் வழிவந்த தனையன் என்ற வகையில்” என தமிழில் கூறி இந்த நாட்டின் தலை சிறந்த சூழலை ஏற்படுத்தியவர் எனது தந்தையும் எமது நாட்டின் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷ அவர்களே இன்றைய காலகட்டத்தில் சிறுபான்மையின மக்களை தனது அன்புக்குரியவர்களாக மதிப்பவர் ஆகவே நாம் அனைவரும் ஒரு கூடையின் கீழ் நின்று செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார். அமைச்சர் அமீர் அலி உரையாற்றுகையில் எமது முஸ்லிம் சமூகம் எமது முஸ்லிம் சமூகம் என கூறிக்கொண்டு திரியும் ரவூக் கைக்கிம் இன்று முஸ்லிம் சமூகத்தையே மறந்து செயற்படுகிறார். முஸ்லீம்கள் இலங்கைக்கு வியபாரம் செய்யவந்தவர்களே என கூறியவர்களோடு இன்று கூட்டு சேர்ந்து செயற்படுகிறார், இவர் எதனை எமது சமூகத்திற்கு பெற்றுத்தரப்போகிறார் என அமைச்சர் கேள்வியெழுப்பினார், மகிந்த ராஜபக்சவுடன் கைகோர்த்துள்ள அலிசாகிர் மௌளான உரையாற்றுகையில் நான் கடந்த காலத்தில் ஐக்கிய தேசிய கட்ச்சிக்காக பாடுபட்டவன், ஐக்கிய தேசிய கட்ச்சியை பற்றி நன்கு அறிந்தவன். ஐக்கிய தேசிய கட்சி மிகவும் பழமை வாய்ந்தது ஆனால் அந்த பழமையான பெறுமதி வாய்ந்த கட்;சி இன்று பல சூழ்ச்சிகள் நிறைந்த கட்சியாக ரணில் விக்கிரமசிங்க மாற்றியுள்ளார். இக் கட்சியால் மக்களுக்கு கிடைக்கப்போவது எதுவுமில்லை அதனால் தான் நான் கௌரவ மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து அவரின் வெற்றிக்காக களமிறங்கியுள்ளேன் என்றார். பின்னர் உரையாற்றிய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.எம் ஹிஸ்புல்லா, அனைத்து சமூகமும் ஒன்றினைந்து வாழக்கூடிய சமூதாயத்தை உருவாக்கியவர் இன்றைய ஜானாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே அவருக்காக இன்று அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இன்று ஒரு இராணுவத்தளபதியை ஜானாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சி களமிறக்கியுள்ளது. இந்த இராணுவத்தளபதிக்கு அரசியலைப் பற்றி என்ன தெரியும்? எவ்வாறு சர்வதேச நிதிகளை கையாளுவது என்பது பற்றி தெரியாதவர் எவ்வாறு ஜானாதிபதியாக வரமுடியும் ? தமிழர்களும் முஸ்லீம்களும்; இலங்கைக்கு விருந்தாளிகள் மாத்திரமே இவர்கள் எங்கள் பௌத்த பூமியில் சொந்தங் கொண்டாடுவதை ஏற்கொள்ளமுடியாது என தொவித்திருந்தார். இவர் கூறிய இந்த வார்த்தைகளை நாம் மறக்கவும் மாட்டோம் மண்னிக்கவும் மாட்டோம் இவ்வாறு சிறுபான்மையின மக்களை மதிக்கத்தெரியாத தமிழ் பேசும் மக்களின் மனதை புரிந்து கொள்ளமுடியாத இவர் எவ்வாறு அனைத்து இண மக்களுக்கும் நல்லாட்சி வழங்குவது. ஆகவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எமக்கு ஓரே ஒரு ஜானாதிபதி மகிந்த ராஜபக்சதான் என மீட்டும் உலகறிச்செய்வோம் என உரைநிகழ்த்தினார் அமைச்சர் ஹிஸ்புல்லா.

Comments are closed.