கடந்த புதன்கிழமை போலாபலமாக நடைபெற்றது. அங்கு பாராட்டப்படுவோரும் அதிதிகளும் பெற்றோர்களும் விபுலானந்த மத்தியகல்லுரி பாண்ட் வாத்தியகுழுவினரால் அழைத்து வரப்பபட்டனர். இவ் நிகழ்வுக்கு அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சீ.செல்வராஜா, ஜனாதிபதியின் இணைப்பாளர் கு.இனியபாரதி, நெக்டெப் பிரதி திட்டப் பணிப்பாளர் தௌபீக் உதவி உள்ளுராட்சி ஆணையாளர் இர்சாட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், இவ் நிகழ்வில் அதிதிகளினால் பொதுச் சந்தைக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டதோடு பல்வேறு பட்ட கல்வித்துறைகளில் வெற்றிபெற்ற மாண மாணவிகளுக்கு சாதனையாளர் கௌரவம் வழங்கி பரிசில்கள் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் காரைதீவைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.





காரைதீவுலிருந்து வாவிமகள்.கொம் நிருபர்.






