E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

முதற் கட்டத்தில் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் நேரடித் தொடர்பற்ற சுமார் 1,000 பேர் விடுவிப்பு.

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் சுமார் ஆயிரம் பேரை விடுதலை செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்தார். இவர்கள் நீதவான் நீதிமன்ற உத்தரவைப்பெற்று, சட்ட மருத்துவ அதிகாரி  ஒருவரின் முன்னிலையில்  பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் நாளை  விடுவிக்கப்பட உள்ளனர். படையினரிடம் சரணடைந்துள்ள சுமார் 11,544 புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 18 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்பு அற்றவர்கள் ஒரு மாதத்திற்கும் குறைவான  காலம்  இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டவர்கள், பங்கர் வெட்டுதல் போன்ற பணிகளில் பலாத்காரமாக  ஈடுபடுத்தப்பட்டவர்கள் போன்றோர்  விடுவிக்கப்படுபவர்களிடையே அடங்குவதாக புனர்வாழ்வு ஆணையாளாள் பணியகம் தெரிவித்தது.

18 வயதுக்குக் குறைவான சுமார் 100 பேரும் முதற் கட்டத்தின்போது  விடுவிக்கப்பட உள்ளார்கள். புனர்வாழ்வு அளிக்கப்படும் புலிகள் இயக்க முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு பயங்கரவாதச் செயற்பாடுகளில் எத்தகைய தொடர்பு இருந்தது என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றது. இவர்களில் நேரடித் தொடர்பற்றவர்கள்  கட்டம்கட்டமாக விடவிக்கப்பட உள்ளதாகவும்  தயா ரத்னாயக்க கூறினார். புனர்வாழ்வு முகாம்களில் உள்ளவர்களிடையே பட்டதாரிகள் 22 பேரும்  பட்டதாரி மாணவர்கள் 148 பேரும் அடங்குவர்.  இவர்களில் பட்டதாரி மாணவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அனுமதி  வழங்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதோடு ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றோருக்கு தமது முன்னைய தொழிலைத் தொடர்ந்து செய்யவும் அனுமதி வழங்கப்பட்ட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 1,000 பேர் 9 ஆம் திகதி விடுவிக்கப்படுவர் என வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின்  ஆலோசகருமான பசில்  ராஜபக்ஷ நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் அறிவித்திருந்தமை தெரிந்ததே.

Comments are closed.