தென்கொரியாவில் குழந்தை வளர்க்கும் பாவனையில் விளையாடப்படுகின்ற கம்ப்யூட்டர் விளையாட்டொன்றில் மூழ்கிப் போன ஒரு பெற்றோர், தமது சொந்தக் குழந்தை பசியால் வாடி உயிரிழக்க இடம்தந்துள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.
இந்தத் தம்பதியர் ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் தொடர்ச்சியாக இணைய பாவனை நிலையம் ஒன்றில் நேரத்தைக் கழித்து வந்ததாகவும், குறைமாதத்தில் பிறந்த தமது சொந்தக் குழந்தைக்கு இவர்கள் ஒரு நாளில் ஒரு தடவை மட்டுமே சாப்பாடு கொடுத்து வந்தனர் என்றும் இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள தென்கொரிய அரசு ஊடகமான யொன்ஹாப் செய்தி நிறுவனம் கூறுகிறது.
சியோலுக்கு தெற்கே சுவியோன் என்ற ஊரில் கைதுசெய்யப்பட்டுள்ள நாற்பத்தொரு வயதுத் தந்தையும் 25 வயது தாயும் இந்த வாரத்தில் முன்னதாக தமது 5 மாதக் குழந்தை இறந்துவிட்டதை தெரிவித்திருந்தனர்.
இந்தக் குழந்தை மீது நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை அது பல நாட்கள் போதிய உணவு கிடைக்காததினாலும் போஷாக்கின்மையாலும் உயிரிழந்துள்ளதாக காட்டியுள்ளது.
இக்குழந்தை பசியால் வாடிய காலகட்டத்தில், பெற்றோரோ இணைய தளத்தில் நிஜமல்லாத கற்பனைக் குழந்தை ஒன்றை வளர்ப்பதில் தீவிரமாக இருந்து பொழுதைக் கழித்துவந்துள்ளனர்.
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் எனும் பழமொழியை தப்பாக புரிந்து கொண்டுள்ளார்கள் போலும்..
நன்றி : bbc tamil






