இந்தியாவின் பிரபல சித்தார் இசைக்கலைஞர் ரவிசங்கர் அவர்கள் கீத் மாதுரி 2010 எனும் இசை நிகழ்ச்சிக்காக வருகை தந்துள்ளார்.இது சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
கடந்த வியாளனன்று ஜனாதிபதி மாளிகையில் நிகழ்ந்த சந்திப்பொன்றிலும் கலந்து கொண்டார்.ஜனாதிபதியால் அவருக்கு நினைவுச்சின்னம் கொடுத்து கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சர் மகிந்த யாப்பா அபயவர்த்தன ஜனாதிபதியின் செயளாளர் லலித் வீரதுங்க உட்பட பல பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்தியாவில் பிறந்த சித்தார் இசை மேதையான ரவிசங்கர் அவர்கள் மேற்குலகுக்கு சித்தாரை அறிமுகப்படுத்தியவராவார்.சித்தார் வாசிப்பதில் இவருக்கிருந்த தனித் திறமை காரணமாக,ஏனைய சித்தார் கலைஞர்களிடமிருந்து இவர் தனித்துவமாக காணப்பட்டார்.இவர் தனது இசைப்பயணத்தை 1930ம் ஆண்டிலிருந்து ஆரம்பித்தார்.இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1999இலும்,மூன்று கிரெம்மி விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
சித்தார் இசை மேதை ரவிசங்கர் அவர்கள் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.இதற்காக அவருக்கு பல திரைப்பட விருதுகளும் கிடைத்துள்ளன.



picture courtesy : colombo page






