E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

அமைச்சர் கௌரவ கருணா அம்மானால் போரினால் பாதிக்கபட்ட ஆலயங்களுக்கு கட்டடப்பொருட்கள் அன்பளிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவரும் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சருமாகிய கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களினால் கிரானில் வைத்து கல்குடா தொகுதியில் பயங்கரவாத சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட ஆலயங்களுக்கு ஆலய புனருத்தான கட்டட பணிக்காக ஒரு தொகுதி சீமெந்து பைகள் அந்தந்த ஆலய பரிபாலண சபையாரிடம் 03.03.2010 அன்று பகிர்ந்தளிக்கப்பட்டது.

இதில் அமைச்சரும், அமைச்சின் மாவட்ட இணைப்பாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கல்குடா வேட்பாளருமான சத்திய வரதனும், கட்சி அதரவாளர்களும் ஆலய நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

•         உதவி வழங்கப்பட்ட ஆலயங்கள் சில வருமாறு

1.   சித்தி விநாயகர் ஆலயம்                   வேம்பு
2.   மகா காளியம்மாள் ஆலயம்             கிரான்
3.   மகா விஷ்ணு ஆலயம்                      வந்தாறு மூலை
4.   பிள்ளையார் கோவில்                       கிண்ணியடி  வாழைச்சேனை
5.   மாணிக்கப்பிள்ளையார்                    சந்திவெளி
6.   முருகன் ஆலயம்                               முறக்கொட்டாஞ்சேனை.

Comments are closed.