E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

அவுஸ்திரேலியாவில் நடந்த சிறுவன் மரணம் தொடர்பாக இந்திய ஆடவர் கைது

ஆஸ்திரேலியாவில் குர்ஷன் சிங் என்ற மூன்று வயதுச் சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர் பாக குர்சேவாக் தில்லன் என்ற இந்திய ஆடவர் ஒருவர் கைதாகி யுள்ளார் என்று ஏஎப்பி தகவல் கூறுகிறது.

முன்னதாக, அந்தச் சிறுவனுடைய உடல் கண்டெடுக் கப்பட்ட இடத் துக்கு அருகே ஒரு பச்சை நிறக் கார் ஒன்று வியாழக் கிழமை தென்பட்ட தாககூறப்படுகிறது.

இந்த மரணம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ள போலிசார் அந்தக் கார் பற்றிய தகவல் அறிந்தவர் யாராக இருந்தாலும் அவர்களுடன் தாங்கள் தொடர்பு கொள்ள விரும்புவதாகத் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே, சிறுவன் குர்ஷன் மரணம் பற்றிய விசாரணையில் அவனுடைய பெற்றோரிடம் தீர விசாரிக்கும் போலிசார் அவர்கள் இருவரையும் போலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாக பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா செய்தித் தகவல் கூறுகிறது.

நன்றி : தமிழ் முரசு

Comments are closed.