E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

ஆங்கில மொழிப் பயிற்சி நிலையம் நிருபமாராவால் திறந்துவைப்பு

இந்திய வெளியூறவூச் செயலாளர் ஸ்ரீமதி நிருபமாராவ் பேராதனையில் ஆங்கில மொழிப் பயிற்சிக்கான இலங்கை – இந்திய மத்திய நிலையத்தை நேற்று மு.ப.10.00 மணியளவில் திறந்துவைத்தார்.

இந்திய உதவியுடன் அபிவிருத்திவெய்யப்பட்ட இந்நிறுவனம் முன்னர் ஆங்கில ஆசிரியர் உயர் கல்விக்கான கல்வியியற் கல்லூரியாக இருந்தது.

இந்திய-இலங்கை நட்புறவானது மிகப் பழைமையானதும் மிக உறுதியானதுமென்று அவர் அங்கு கருத்துத் தெரிவித்தார். வாழ்க்கைத்திறனுக்கான வாழ்வாதாரத்தை ஆங்கிலக் கல்வி தருவதாகவும் பூகோளமயமாக்களில் இது ஒரு தொடர்பாடல் பொது மொழியாகவும் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Comments are closed.