முன்னாள் முதலாவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியும்(1989-1990) தற்போதய பாதுகாப்புச் செயலாளருமான கோடாபாய ராஜபக்க்ஷஅவர்கள் அநுராதபுரம், சாலியபுர எனும் இடத்தில் அமைந்துள்ள கஜபா றெஜிமன்ட் தலைமயகத்தில் படையினருக்கான இரண்டு மாடி விடுமுறை இல்லம் மற்றும் குடிநீர் திட்டத்தையும் அண்மையில்(ஜூலை:15) திறந்து வைத்தார்.
படைத்தளத்தை வந்தடைந்த பாதுகாப்புச் செயலாளருக்கு கஜபா றெஜிமன்னடின் தளபதியான மேஜர் ஜெனரல் எஸ்டபளியூஎல்.தவுலகல அவர்களின் வளிகாட்டலில் இராணுவ அனிவகுப்பு மரியாதை வழங்கி வரவேற்கப்பட்டார்.
பாதுகாப்புச் செயலாளருக்கு முன் இங்கு அதிதியாக கலந்து கொன்ட இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய அவர்களுக்கும் பிரத்தியோகமாக இராணுவ மரியாதையும் அணிவகுப்பும் வளங்கப்பட்டது.
இதனைத் தொடந்து,இராணுவத்தளபதி மற்றும் கஜபா படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் தவுலகல அவர்களின் வேன்டுதலின் பேரில் இரண்டு மாடிக்கட்டத்தை பாதுகாப்புச் செயலாளர் திறந்து வைத்தார்.இதன் ஒவ்வெரு மாடியும் சகல வசதிகளையும் கொன்ட எட்டு அறைகளைக்க கொன்டுள்ளது.இதைத் தொடர்ந்து இரண்டாவதாக அமைக்கப்பட்ட புதிய விடுமுறை இல்லத்தை இராணுவத்தளபதி திறந்து வைத்தார்.
இவ்விஜயத்தின் இரண்டாம் கட்டமாக,படைத்தளத்தின் சகல இடங்களிலும் குடிநீரைப் பெற்றுக் கொள்ள வசதியாக இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட குடிநீர் வசதியை பிரதம அதிதி திறந்து வைத்தார்.இதன்போது பாதுகாப்புச் செயலாளர் உயர் அதிகாரிகளுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள மறக்கவில்லை.
பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத்தளபதி இருவரும் இந் நிகழ்ச்சிகள் ஆரம்பிப்பதற்க்கு முன் மறைந்த படையினரின் நினைவு உருவகத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வின் போது கஜபா படையின் உயர் அதிகாரிக்ள் பலரும் கலந்து கொன்டனர்.



Picture Courtesy : army.lk






