நுவரெலியாவிலிருந்து புசல்லாவை வழியாக கண்டி நோக்கி சென்ற வேன் ஒன்று விபத்துக்கு உள்ளாகியதில் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் புசல்லாவை வகுக்கப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம நேற்று 17ம் திகதி நண்பகல் வேளையில் இடம் பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம் அக்கறைப்பற்று ஜீன்ஸ் வீதி முதலாம் குறிச்சியைச் சேர்ந்த 15 பேர் கொண்ட முஸ்லிம் குடும்பம் ஒன்று நுவரெலியாவுக்குச் சுற்றுலா சென்று விட்டு புத்தளம் நோக்கிப் புறப்பட்டுள்ளது.
இவர்கள் நுவரெலியாவிலிருந்து புசல்லாவை வழியாக கண்டி நோக்கிச்n சன்று கொண்டிருந்த போது புசல்லாவை இரட்டைப்பாதை கெலேகால என்ற பகுதியில் நேரெதிரில் வந்த லொறி ஒன்றுடன் மோதியுள்ளது.
இதன் போது முறையற்ற வகையில் வாகனத்தைச் செலுத்தி வந்த லொறியின் சாரதி சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளார். விபத்துக்கு உள்ளான வாகனம் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. சம்பவம் இடம் பெற்ற போது வேனினுள் 3 குழந்தைகளும் 7 பெண்களும் 5 ஆண்களும் இருந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் புசல்லாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






