மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த அவரசரக் கூட்டமொன்று இன்று மாலை 3.30 மணியளவில் மன்னார் பிரதேச செயலகத்தில் மாவட்ட பிரதேச செயலாளர் ஸ்டேன்லி டிமேல் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிஸ் அதிகாரிகள் சுகாதார திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் நோய் தடுப்பு குறித்து தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் டெங்கு நோய் அங்கு அதிகரித்துள்ளது.
இதன் போது மன்னார் பொலிஸ் நிலையத்தினால் எதிர்வரும் 2ஆம், 9ஆம், 21 ஆம், 28 ஆம் திகதிகளில் மன்னார் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் கருத்து தெரிவிக்கையில், மன்னாரில் மூர்வீதி, உப்புக்குளம், பள்ளிமலை, முதலான கிராமங்களிலேயே நோய் அதிகரித்துள்ளது.
பள்ளிமுனைப் பகுதியில் உள்ள வீடுகளை பரிசோனை செய்த போது சுமார் 108 வீடுகள் டெங்கு நோய் அதிகரிப்புக்கான நிலையில் காணப்பட்டுள்ளது.
இதுவரைக்கும் டெங்கு நோயினால் 74 பேர் பாதிப்படைந்துள்ளதோடு நாள் ஒன்றுக்கு சுமார் 10 பேர் வரை டெங்கு நோய் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனவே இதனைக் கவனத்தில் கொண்டு தற்போது நோய் தடுப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.






