E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

பெல்ஜியம் நாட்டில் அதிவெப்ப காலநிலை:520 பொதுமக்கள் உயிரிழப்பு

பெல்ஜியம் நாட்டில் நிலவி வரும் அதிவெப்ப காலநிலை காரணமாக சுமார் 520 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் ஜூலை மாதம் 4ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு மக்கள் உயிரிழந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

இது தொடர்பில் ஆய்வொன்றை நடத்தியபோதே அதிவெப்ப காலநிலையால் மக்கள் உயிரிழப்பது தெரியவந்துள்ளது.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பெல்ஜியம் நாட்டில் மிகவும் சூடான காலநிலை நிலவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments are closed.