E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

இலங்கையின் அபிவிருத்திக்கு உதவ சீனா தயார்

சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் டி.எம். ஜயரத்ன விடம் இலங்கையின் அபிவிருத்திக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சீன அரசு உதவுவதாக சீனாவின் உதவிப் பிரமதர் ஸீ ஜிங்ஸ் தெரிவித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு இன்று எமது இணையத்திற்குத் தெரிவித்தது.

நேற்று இலங்கைப் பிரதமரும் சீனா உதவிப் பிரதமரும் ‘கிரேட் ஹோல்’  இல் வைத்துச் சந்தித்வேளை இதனைத் தெரிவித்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.

அத்துடன் இலங்கை மக்களினதும் இலங்கையின் ஜனபதிபதியினதும் மேலான வாழ்த்துக்களை அவர் சீன மக்களுக்கும் சீனப் பிரதமருக்கும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.