E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

மத்திய வங்கியில் தங்கத்தின் சேமிப்பு அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கி கடந்த 10 மாதங்களில் 21 மெட்ரிக் தொன் தங்கத்தை வாங்கியுள்ளதன் மூலம் மத்திய வங்கியில் உள்ள தங்கத்தின் சேமிப்பு பெரிதும் அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் தர்மா தீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மத்திய வங்கியில் உள்ள தங்கத்தின் மதிப்பு 75 பில்லியன் ரூபாவென அவர் மேலும் கூறினார்.

10 மாதங்களுக்கு முன் 2 முதல் 3 மெட்ரிக் தொன் தங்கமே மத்திய வங்கியின் சேமிப்பில் இருந்தது. தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளாந்தம் அதிரிகத்து வருகிறது.இவ்வாறான நிலையில் மத்திய வங்கி அதன் தங்க சேமிப்பை அதிகரித்துள்ளமை நாட்டில் பொருளாதார நிலை பலமடை ந்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது என்று சிரேஷ்ட பிரதி ஆளுநர் குறிப்பிட்டார்.

இவ்வாறு தங்கத்தின் சேமிப்பை அதிகரிக்க முடிந்துள்ள நிலையில் நாட்டுக்கு பாதகமான நிலையிலோ நாடு நட்டமடையும் வகையிலோ அதனை மாற்றிக்கொள்ள மத்திய வங்கி ஒரு போதும் நடவடிக்கை மேற்கொள்ளாது.

தங்கத்தின் சேமிப்பை வெற்றிகரமாக அதிகரித்துக் கொண்டுள்ள மத்திய வங்கி அதன்வெளிநாட்டு முதலீடுகள் மூலம் 10 பில்லியன் ரூபாவை வருமானமாகவும் பெற்றுள்ளது.

கடந்த வருடம் முழுவதும் பெறப்பட்ட வெளிநாட்டு முதலீட்டு வருமானம் இந்த வருடம் ஜனவரி மாதத்திலேயே கிடைக்கப் பெற்றுள்ளது.

இவ்வருட இறுதியளவில் வெளிநாட்டு முதலீட்டு வருமானமாக 20 பில்லியன் ரூபாவை பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு நாட்டில் வெளிநாட்டு சேமிப்பு அதிகரித்துள்ளதால் நாட்டின் 6 மாத கால இறக்குமதியை ஈடுசெய் யக்கூடியதாக அமைந்துள்ளது.

இரண்டு முதல் மூன்று வருடங்களுக்கு முன் 2 வார காலத்துக்கான இறக்கு மதியை ஈடு செய்யும் அளவுக்கான வெளிநாட்டு சேமிப்பே எமது கையிருப்பில் இருந்தமை குறிப்பிடத்தக்கது என்று மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் மேலும் கூறினார்.

Comments are closed.