இலங்கையை 6 வருடகாலப் பகுதிக்குள் சிறந்த சுகாதாரத் துறையை கொண்ட நாடாக மாற்றியமைக்கப் போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று இரத்தினபுரியில் தெரிவித்தார்.
இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பிரசவ வார்டினை திறந்து வைக்கும் போது மேற்படி ஜனாதிபதி தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு அவர் உரையாற்றுகையில்,“டெங்கு நோய் தீவிரமாக பரவி வருவதனால் அதனை கட்டுபடுத்தும் முகமாக நாடளாவிய ரீதியில் பிரதேச சபைகள் மூலம் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரித்தார்.






