பொலன்னறுவை ரயில் நிலையத்திலிருந்து மட்டக்களப்புக்கு புதிய ரயில் பஸ் சேவை ஒன்று எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.
ரயில்வே திணைக்களத்தின் இரத்மலானை பொறியியல் பிரிவினரால் மாற்றியமைக்கப்பட்ட இரண்டு இந்திய தயாரிப்பு பஸ்கள் ரயில் பஸ்ஸாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. தொடர்ந்து வாசிக்க…
இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய வெடிகுண்டுகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 902 குண்டுகள் பூமியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதன் முறையாக மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகளின் தகவல் தொழில் நுட்ப அறிவையும், வாசிப்புத்திறனையும் அதிகரிக்க இன்று தகவல் தொழில் நுட்ப பிரிவும், நூலகமும் திறந்து வைக்கப்பட்டது.
வேலணை வைத்தியாசாலையின் குடும்பநல மருத்துவ உத்தியோகத்தர் தர்ஷிகாவின் கொலை தொடர்பான சந்தேக நபர் டாக்கடர் பிரியந்த செனவிரட்ணவை பிணையில் செல்வதற்கு மேல்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
பொலிஸ் திணைக்களத்திற்கு புதிதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களாக பட்டதாரிகளைச் சேர்த்துக் கொள்ளும் திட்டம் ஒன்றை நடைமுறைப் படுத்தும்படி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
அபிவிருத்தி,பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட விடயங்களில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு, மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படாது.
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக கிளிநொச்சி நகரில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக்காலை ஆரம்பித்து வைத்தார்.
அமெரிக்க யுத்தக் கப்பல் பேர்ள் ஹார்பர் எல்.எஸ்.டி. 52 திருகோணமலைக்கு வருகை தந்துள்ளது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (13) காலை 11.00 மணியளவில் இக்கப்பல் திருகோணமலை சீனக்குடா அஷ்ரப் இறங்கு துறையில் நங்கூரமிட்டுக் கொண்டது. இதில் 800 படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்களை அச்சிட்ட இருவர் நேற்று கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் சிறந்த நட்சத்திரமாகக் கருதப்பட்டவர்…. ஒரு நிமிடம் கூட விளையாட்டுத் திடலில் கால்பதிக்காதவர்… ஆனால் எந்த அணி தகுதி பெறும் என்பதை அச்சொட்டாகக் கணித்துக் கூறுபவர்…
கண்டம் விட்டு கண்டம் சென்று எதிரி இலக்குகளை மிகச் சரியாகத் தாக்கும், எதிரி நாட்டு போர் விமானங்களை வழியில் மறித்துத் தாக்கும் திறன் கொண்ட உலகின் முதல் விமானியில்லா போர் விமானத்தை பிரிட்டன் தயாரித்துள்ளது.
உகண்டா, கம்பாலவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டு வெடிப்பில் இலங்கையர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.
ஜொகான்னஸ்பர்க் சாக்கர் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஹாலந்துக்கு தண்ணி காட்டிய ஸ்பெயின் 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதன் முறையாக உலக கோப்பை கால்பந்தில் சாம்பியன் ஆனது.
நாட்டின் சில பகுதிகளில் இன்று சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடத்தப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸ் விசேட பிரிவில் செயலாற்றிய புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சுமார் 16 விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாட்டின் பல பாகங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் அடங்கிய உயர் மட்டக் குழுவினர் நேற்று (21) முல்லைத்தீவு பிரதேசத்துக்கு விஜயம் செய்தனர். இவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகள், மக்களின் மேம்பாடு, மீள் குடியேற்றம் மற்றும் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தனர்.
பாலியல் வழக்கில் சிக்கி, கைதாகி, ஜாமீனில் வெளியே வந்துள்ள நித்யானந்தாவை மாஜி பிரதமர் தேவ கௌடாவின் கட்சியின் முக்கியத் தலைவரான பாலகிருஷ்ணா சந்தித்துப் பேசினார். பெங்களூர் மாகடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான இவர் மதசார்பற்ற ஜனதா தளத்தின் முன்னணி தலைவராவார்.
பயங்கரவாத குழுக்களுக்கு தனிப்பட்டவர்களோ அல்லது குழுக்களோ, ஆலோசனை வழங்குவது பேச்சு சுதந்திரத்தை பாதிக்கும் செயல் என அமெரிக்க உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்களை அவர்களது சொந்தக் காணிகளில் குடியமர்த்துவதற்கு ஏதுவாக காணிக்கச் சேரிகளை உடனடியாக இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படவு ள்ளதாக மீள்குடியேற்ற பிரதி யமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி இன்று மாலை 4.15 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார். 





