வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள சிறிய தாழமுக்கம் காரணமாக புயல் சின்னம் உருவாகும் அபாயம் உள்ளபோதும் எவ்வகையிலும் இலங்கைக்கு பாதிப்புகள் ஏற்படமாட்டாது என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள இத்தாழ முக்கம் காரணமாக தமிழ் நாட்டுக்கே அதிகளவு மழை பெய்யும். இலங்கைக்கு தென் மேற்கு பருவ பெயர்ச்சி மழையுடன் காற்று சற்று வேகமாக வீசும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. தொடர்ந்து வாசிக்க…
மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்கள் சென்றுள்ளதன் மூலம் 2010 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் வெளிநாட்டு செலாவணியாக 890 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடைத்துள்ளது. அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுச் செல்பவர்களின் எண்ணிக்கையும் 22 சதவீதமாக அதிகரித்துள்ளது என பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.
தென் மேல் பருவப் பெயர்ச்சி மழை அடுத்துவரும் இரண்டொரு தினங்களில் ஆரம்பிக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளர் கே. எச். எம். எஸ். பிரேமலால் நேற்றுத் தெரிவித்தார்.
முள்வேலி முகாமிலுள்ள தமிழர்கள் விரைவில் மறுகுடியமர்த்தப்படுவர் என தி.மு.க. அணி எம்.பி.க்களிடம் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே உறுதியளித்தார்.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்ச்சியாக தேசத் துரோகமான அறிக்கைகளை விடுத்து வருகிறார். அவருக்கு என்ன தண்டனை வழங்குவது என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதித்துறையினரின் பொறுப்பாகுமென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.
போபால் விஷ வாயு கசிவு வழக்கில் 26 ஆண்டுகளுக்குப் பின் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், குற்றவாளிகள் என அறிவித்த 8 பேருக்கு தலா 2 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
ஜனாதிபதி அரசியல் வாழ்வில் குதித்து இன்று திங்கட்கிழமை 7ம் திகதியுடன் 40 வருடங்கள் பூர்த்தியடைகின்றன.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில், விசேட தடுப்புப் பிரிவின் கீழ் வைக்கப்பட்டிருந்த 10 கைதிகளும் ஒரு சந்தேக நபரும் தற்காலிக சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகச் சிறைச்சாலைத் திணைக்கள பேச்சாளரும் ஆணையாளருமான கெனித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாஸி இம்மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்ட விரோத கட்டிடங்களை அகற்றும் போது அது சட்ட விரோதமாக இருக்கக்கூடாது என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கா தெரிவித்தார்.
மத்திய கிழக்கிலுள்ள காசா பகுதிக்கு உதவிப் பொருட்களை கொண்டு செல்ல முயன்ற ஐயர்லாந்துக் கப்பல் ஒன்றிலிருந்து சனிக்கிழமை கைது செய்யப்பட்ட 19 பேரை நாடு கடத்தும் நடவடிக்கைகளை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.
மேஸ்ட்ரோஸ் மெடிலைன் சிஸ்டம்ஸ் நிறுவனம் ஒரு அதி நவீன பிளாக்பெர்ரி செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது செல்போனாக மட்டுமல்லாமல், ஈசிஜி எடுத்துப் பார்க்கும் வசதியையும் கொண்டுள்ளது என்பதே இதன் விசேஷம்.
ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடை யிலான பேச்சுவார்த்தை நாளை நடைபெறவிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கின்றது. இப் பேச் சுவார்த்தைக்கான அழைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தனுக்கு அனுப்பப்பட்டுள் ளது.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு ஒரு விபத்துதான் என்றும், அதுதொடர்பாக நபர் ஒருவர் பிடிபட்டுள்ளார் என்றும் கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. அஜய் குமார் சிங் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் எதிர்வரும் ஏழாம் திகதி திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக அரசாங்க வட்டாரங்களிலிருந்து நம்பகமாகத் தெரியவருகிறது.
சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழா கொண்டாட்டங்கள் கொழும்பில் நேற்று கோலாகலமாக ஆரம்பித்தன. சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற சர்வதேச பத்திரிகையாளர் விழாவுடன் இது ஆரம்பமானது.
இலங்கையில் நுவரேலியா மாவட்டம் தலவாக்கலயின் தமிழ் மகா வித்தியாலத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அப்பள்ளியின் மாணவிகள் சிலரிடம் பாலியல் சில்மிஷம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானினின் மத்திய மற்றும் வடக்குப் பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
வடக்கில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.
ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த தலைநகர் காபூலில் பழங்குடியின தலைவர்கள் கலந்து கொள்ளும் 3 நாள் மாநாட்டுக்கு அதிபர் ஹமீத் கர்சாய் வந்தபோது தலிபான்கள் ரொக்கட் தாக்குதல் நடத்தினர். 





