நிதி நிறுவனங்கள் ஒன்றிணைப்பு
இலங்கை சேமிப்பு வங்கியை மேலும் வலுப்படுத்தும் வகையில் தேசிய அபிவிருத்தி பொறுப்பு நிறுவனத்தையும் அதனுடன் இணைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இதன் மூலம் கிடைக்கும் மேலதிக இலாபத்தை பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் வங்கியின் சேவைகளை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க…
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 22,800 பேர் தெரிவு செய்யப்படவுள்ளதோடு பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளி இந்த வார இறுதியில் வெளியிடப் படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்தார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதால் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதற்கான அவசரம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இலங்கையில் எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழாவுக்கான ஏற்பாடுகள் கொழும்பில் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 1500 பேருக்கு விரைவில் நிரந்தர தொழில் வாய்ப்பு வழங்கும் பொருட்டு அரசாங்கத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக ட்ரைஸ்டார் ஆடைத் தொழிற்சாலையின் தலைவர் தேசமான்ய கலாநிதி குமார் தேவபுர தெரிவித்தார்.
பாகிஸ்தானைத் தொடர்ந்து பங்களாதேஷிலும் பேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளது.
நம் நாட்டில் அதிகமாக உபயோகிக்கப்படும் தொடர்பு சாதனமாக கையடக்கத் தொபேசிகளே விளங்குகின்றன. ஒருவர் இரண்டுக்கும் மேற்பட்ட கைபேசிகளை, தொடர்புகளை வைத்திருப்பது சர்வசாதாரணம். எனினும் பாடசாலை மாணவர்கள் கைபேசிகளை பாவிக்க அனுமதிக்கலாமா இல்லையா என்பது இன்னும் விவாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
கந்தளாய் அக்போபுர ரஜமஹா விகாரைக்கும் பொலன்னறுவை சோமாவதி விகாரைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று விஜயம் செய்தார்.
தெற்கு பசிபிக் கடல் பகுதியைச் சேர்ந்த நாடு வானுது. அங்கு நேற்றிரவு 10.44 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. கடலில் ராட்சத அலைகள் எழுந்தன.
இலங்கையில் இன்றைக்கு பெற்றோரை வாட்டும் பெரும் பிரச்சினையாக உள்ளது, செல்போனில் பரவும் செக்ஸ் காட்சிகள்தான். ஆபாச இணையதளங்களை இந்த செல்போன்களிலேயே பார்த்துக் கொள்கிறார்களாம். சிறுவர்கள் அதிக அளவில் இந்தச் செயலில் ஈடுபடுவதாகத் தெரிய வந்துள்ளது.
தென்மேல் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி ஆரம்பமானதும் இடி, மின்னலின் தீவிரத் தன்மை முழுமையாக நீங்கிவிடும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி தெரிவித்தார். என்றாலும் இடி, மின்னல் தாக்கம் காரணமாக கடந்த இருமாதங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏர் இந்தியா விமானங்களது 20,000 ஊழியர்கள் நேற்று இரண்டாவது நாளாகவும் மேற்கொண்டு வந்த பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.
மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் சுமார் 7000 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர், மின் விநியோகம், நீர்ப்பாசனம், மற்றும் சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறும் வெள்ளப்பெருக்கு நிலையைக் கட்டுப்படுத்த துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சகல அதிகாரிகளுக்கும் விசேட பணிப்புரைகளை விடுத்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட அபிவி ருத்தி நடவடிக்கைகளைக் கவ னிக்கவென புதிய எம். பிக்களைக் கொண்ட உயர்மட்டக் குழு வொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் எதிர்வரும் ஜூன் 08ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இராணுவ வெற்றியின் முதலாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இன்று புதன்கிழமையும் நாளை வியாழக்கிழமையும் தேசிய கொடியைப் பறக்கவிடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜீ – 15 அமைப்பின் உறுப்பு நாடுகளில் கூடுதல் சந்தை வாய்ப்பைப் பெறுவதற்கு இலங்கைக்குச் சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
தற்போது பெய்து வரும் அதிக மழை காரணமாக மேல் மாகாணத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துரித கதியில் தேவையான நிவாரணங்களை வழங்கவும், வெள்ள நீர் கிரமமாக வடிந்து செல்வதற்கு இடர் முகாமைத்துவ அமைச்சு, மாகாண சபை நிறுவனங்கள், பிரதேச செயலாளர்கள் 





