பெருமளவில் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருக்கும் இந்திய மருத்துவக் கவுன்சிலைக் கலைப்பதற்கான அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீல் ஒப்புதல் அளித்திருக்கிறார்.இந்தக் கவுன்சிலுக்கு பதிலாக பிரபல மருத்துவர்களைக் கொண்ட ஏழு உறுப்பினர் நிர்வாகக் குழு அமைக்கப்பட உள்ளது.
அடுத்த ஓராண்டுக்கு அந்தக் குழு பொறுப்பில் இருக்கும் என மத்திய சுகாதாரத் துறைச் செயலர் சுஜாதா ராவ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க…
உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தில் தேர்தல் முறைமாற்றம் முக்கிய இடம் வகிக்கின்றது. தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைக்குப் பதிலாகத் தொகுதிவாரி முறையும் விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் கலந்த ஒரு தேர்தல் முறையை நடை முறைப்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது. பிரதான அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் இந்த மாற்றத்துக்கு ஆதரவளிக்கின்றன.
அம்மானுடைய பக்குவமான போக்கினை புலிகளின் தலைவர் பிரபாகரனே புரிந்து கொள்ளவில்லை என்றால், எமது தமிழ் மக்களா புரிந்துகொள்ளப்போகின்றார்கள். புலிகளின் நடவடிக்கைகளை நீதியான முறையிலும், சட்டங்களுக்கேற்ற முறையிலும் தமிழர்களின் அழிவுகளைக்குறைக்கும் போக்கையும் அப்போதிருந்தே எடுத்துரைத்திருந்த போதிலும் புலிகளின் தலைமை அதனை நிராகரித்தனர். அதேபோன்று இன்றும் ஒரு சிலரின் போக்குகள் அம்மானின் அடிகளைப்புரிந்து கொள்ளாது தேவையற்ற வதந்திகளையும் அவருக்கெதிரான வதந்திகளையும் தற்போது வீசிவருகின்றனர். இந்தவகையில், புலத்தில் தமிழர்களின் போக்கு எங்கே அம்மானை ஏற்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில் இவ்வாறான போக்கில் மக்களை கொண்டுசெல்கின்றனர்.
அரசாங்கத்தின் இவ்வருடத்திற்கான முழுமையான வரவு செலவுகளைக் கொண்டதான வரவு செலவுத் திட்டமொன்று எதிர்வரும் ஜுன் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
படித்த படிப்பினைகளை கொண்டு பிரச்சினைகளின் அடிப்படையை கண்டறிவதற்காக ஏழுபேர் கொண்ட தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஜீ- 15 நாடுகளின் மாநாடு இன்று (14) முதல் 17 ஆம் திகதி வரை ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெறும். இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கைக்குழு இன்று (14) தெஹ்ரான் பயணமாகுமென எதிர் பார்க்கப்படுகிறது.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை நீக்க வேண் டும் என்ற கோரிக்கை மிகப் பழையது. நீண்ட கால மாகப் பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் வலியுறுத்திவரும் கோரிக்கை. இப்போது அரசாங்கம் இம் மாற்றத்தைச் செய்வதற்கு முன்வந்திருக்கும் நேரத்தில் அதற்கு எதிரான குரல் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிலிருந்து வருகின்றது.
பல்வேறுபட்ட சக்திகளையும் உள்ளடக்கியதாக மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கக்கூடிய செயற்பாட்டுத் திறன் வாய்ந்த நடவடிக்கைகளை உறுதிப்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழைப்பு விடுத்திருக்கிறது.
தேசிய படைவீரர் வாரத்தை ஆரம்பிக்கும் முகமாக முதல் கொடியை அணிவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது.
ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சுக்கென இம்முறை பிரதி அமைச்சரை நியமிக்காமல் விடுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார மீண்டும் நேற்று (11) பதவி ஏற்றுக்கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புக சென்ற 64 இலங்கைத் தமிழர்களின் படகு பழுதடைந்ததால், கடலில் மூழ்கி 5 பேர் பலியாகி வி்ட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலநறுவை சோமாவதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு இருவர் பலியானதுடன் 25 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளு க்கு ஜப்பான் அரசாங்கமும் ஜப்பான் வர்த்தக சமூகமும் முழு ஒத்துழைப்பு வழங்கும் என நிப்பொன் மன்ற தலைவர் யொஹெய் சசகாவ தெரிவித்தார்.
இந்தோனேஷியாவின் வடக்கு சுமாத்ராவில் இன்று காலை 7.4 ரிச்டர் அளவில் புவி அதிர்வு ஏற்பட்டுள்ளது. எனினும் இலங்கைகு இதனால் எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை என சுனாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது
சிகிரியா ஓவியங்களைப் பழுதாக்கும் சிறிய உயிரினங்களை அழிப்பதற்கு இரசாயனக் களைகொள்ளியைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கல்வித் துறையை முழுமையாக மறுசீரமைக்கும் வகையில் புதிய கல்விச் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்பதாக இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.





