E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

ஊழல் மோசடிகள் காரணமாகவே 30 ஆண்டுகளாக யுத்தம் நீடித்தது – கடற்படைத்தளபதி

இலங்கையில் இடம்பெற்ற ஊடல் மோசடிகள் காரணமாகவே 30ஆண்டுகாலம் சிவில் யுத்தம் நீடித்ததென கடற்படைத்தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியான மோசடிகள் இடம்பெற்றதனாலேயே கடந்த காலங்களில் யுத்தத்தை வெற்றிக்கொள்ள முடியாதுபோனதென அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறையும் பல்வேறு நாடுகளிடமிருந்து கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட போதிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் திடமான நிலைப்பாட்டினால் யுத்தத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடிந்ததாக தொடர்ந்து வாசிக்க…

மன்னார் முசலிப்பிரதேசத்தில் 2ம் கட்ட மீள்குடியேற்றம் ஆரம்பம் ‐ ரிசாத் பதீயூதீன்

வடக்கின் வசந்தம் இரண்டும் கட்ட நடவடிக்கைகள் நாளை மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலக பிரிவில் நாளை ஆரம்பமாக உள்ளதாக மீள்க்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதீயூதீன் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் முசலி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட 7 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த 561 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 120 பேர் மீள்க்குடியேற்றப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மருதமடு பகுதியில் 68 குடும்பங்களும், பூநொச்சிகுளம் பகுதில் 16 குடும்பங்களும், பண்டாரவெளியில் 14 குடும்ப தொடர்ந்து வாசிக்க…

வந்த வழியே மீண்டும் திரும்பிச் செல்லுமாறு கப்டன் அலி கப்பலுக்கு இலங்கை அரசாங்கம் உத்தரவு !

வன்னியில் மோதல் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண பொருட்களுடன் இலங்கைக்கு வந்த வணங்கா மண் கப்பலை நாட்டை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்களை இறக்காது, நாட்டை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக ஏ.எப்.பி. செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இக்கப்பல் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் முறையான பயண ஏற்பாடுகள் செய்யாது சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்ததாகத் தெரிவித்துக் கடற்ப தொடர்ந்து வாசிக்க…

சரனடையும் புலிகளை சர்வதேச சட்டத்திற்கு அமைய நடத்துமாறு வாழச்சேனை நீதிமன்றம் உத்தரவு !

சரணடடையும் விடுதலைப் புலி உறுப்பினர்களை சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு அமைய நடத்துமாறு வாழைச்சேனை மஜிஸ்திரேட் மாணிக்கவாசகம் கணேசராஜா இன்று பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். கடந்த 28 ஆம் திகதி வாகரைப் பிரதேசத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் 90 நாட்கள் அவசரகால சட்ட விதிகளின் கீழ் வாகரைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொண்டையன்கேணியைச் சேர் தொடர்ந்து வாசிக்க…

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

இராணுவத்திலிருந்து தப்பியோடிய 585 பேருக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இராணுவத்திலிருந்து தப்பியோடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 585 பேரே இவ்வாறு பொதுமன்னிப்பின் அடைப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பௌத்த மதம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு 2300 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இராணுவ நீதிமன்றினால் ஒரு வருட கால சிறைத் தண்டனை வழங்கப்பட்ட சிறைக் தொடர்ந்து வாசிக்க…

புதிய பிரதம நீதியரசராக அசோக என் டி சில்வா பதவியேற்றார்.

புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதவான் அசோக என் டி சில்வா  ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார். 1971ம் ஆண்டு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் சட்டத்துறையில் தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட இவர், 1972ம் ஆண்டு உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிமாணம் செய்துகொண்டார். இலங்கை சட்டத் துறையிலே பல பதவிகளை வகித்து வந்த இவர் 2001 ஆண்டு உயர் நீதிமன்றின் மேலதிக விசாரணை நீதிபதிகளுக்கான தலைவராக விளங்கியுள்ளார். 2004ம் ஆண்டு முதல் ருவண்டாவில் நிறுவப்பட்ட சர்வதேச குற்ற தொடர்ந்து வாசிக்க…

சிறு தொழிலை பெரும் பலமாக மாற்றிப்பார்த்த மக்களை நாளை வரிசையில் நிற்கும் மக்களாக மாற்றிவிடாதீர்கள்..

இலங்கை மக்களைப் பார்த்து, “சிலோன் காரன்” என்று வெளிநாட்டு மக்கள் அடையாளப்படுத்தும் போது, அதை ஓரளவுக்கு எல்லோருமே பெருமையாகத்தான் நினைத்திருந்தார்கள். பின்னர் வந்த இலங்கையும், தமிழீழமும் மக்களையும் பிரித்து, நம்மீது அக்கறை கொண்டிருந்த பிற நாட்டு மக்கள் உணர்வுகளையும் சேர்த்துத்தான் பிரித்தன. அதற்காகத் திரும்பவும் இலங்கையை சிலோன் ஆக்க முடியாது, ஆனால் பிரிந்து போன மனித உள்ளங்களை முயற்சித்தால் மீண்டும் இணைத்துக்கொள்ளலாம். யுத்தம் முடிந்த சூட்டோடு தொடர்ந்து வாசிக்க…

ஆகஸ்ட் மாதம் முதல் நேரடியாக விசா வழங்கும் நடைமுறையை பஹ்ரேன் அரசு நடைமுறைப்படுத்தவுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்று பஹ்ரேன் செல்லும் இலங்கையர்களுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நேரடியாக அவர்களுக்கே விசா வழங்கும் நடைமுறையை பஹ்ரேன் அரசு நடைமுறைப் படுத்தவுள்ளது. இதுவரை காலமும் பஹ்ரேன் செல்லும் இலங்கையரை அந்நாட்டில் பொறுப்பேற்பதாக உத்தரவாதமளிக்கும் (ஸ்பொன்சர் நபர் ஊடாகவே விசா வழங்கப்பட்டு வந்தது.இனிமேல் அந்த நடைமுறை பின்பற்றப்படாமல் இலங்கையிலிருந்து செல்லும் நபரை பஹ்ரேன் அரசே பொறு ப்பேற்கும் வகையில் அனுசரணையாளர் தொடர்ந்து வாசிக்க…

தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக பிரித்தானியா கண்ணீர் வடிக்காது – டேவிட் மில்பாண்ட்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்விகளுக்காக பிரித்தானியா ஒருபோதும் கண்ணீர் மல்காதென அந்நாட்டு வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்பாண்ட் தெரிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவிற்கும், டேவிட் மில்பாண்ட்டிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போத அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை இலங்கை அரசாங்கம் அடைந்த ஓர் பாரிய வெற்றியாகவே கருதப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார தொடர்ந்து வாசிக்க…

தமிழ் மக்களுக்கு சரியான தீர்வொன்றை பெற்றுகொடுக்க ஜனாதிபதியுடன் பேசத் தயார் – TNA

தமிழ் மக்களுக்கு திருப்திகரமான அரசியல் தீர்வொன்றைப் பெற்றக்கொடுக்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த மாதம் 9ஆம் திகதி கூடும் கட்சி உறுப்பினர்கள் இவ்விடயம் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடி இறுதித் தீர்வொன்றை எடுக்கவிருப்பதுடன், இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் வடக்கின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றிக் கலந்துரையாடப்படும் எனத் தமிழத் தேசியக் தொடர்ந்து வாசிக்க…

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11வயது பாடசாலை மாணவன் ஸ்தலத்தில் பலி !

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11வயது பாடசாலை மாணவன் ஒருவன் ஸ்தலத்திலேயே கொல்லப் பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை 5.00மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலீசார் தெரிவித்துள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் தனது தாயுடன் ஆலயத்திற்குச் சென்று கொண்டிருந்த போது மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் லொறியொன்று சிறுவனை மோதவிட்டுச் சென்றுள்ளது. தெய்வநாயகம் ஜீவதாஸ் தொடர்ந்து வாசிக்க…

புலம்பெயர்ந்த ஈழதமிழர்களின் அகதி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுமா…

இலங்கையில் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்று வந்த உள்நாட்டுப் போர் தற்போது முடிவடைந்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் அகதிகளாகவுள்ள தமிழர்கள் எவ்வேளையிலும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 30 வருடங்களாக விடுதலைப் புலிகளுக்கும் இலங்கையை ஆட்சி புரிந்த அரசுக்களுக்குமிடையே இடம்பெற்றுவந்த போரினால் லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் 1983 ஜூலையில் தொடர்ந்து வாசிக்க…

இருபதாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதை அமைச்சர் போகொல்லாகம நிராகரிப்பு !

இலங்கையின் வடக்கே மோதல் சூன்யப் பகுதியில் 20 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை வெளிவிகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம உறுதியாக நிராகரித்துள்ளார். மோதல் சூன்யப் பகுதி மீது நாங்கள் ஒரு போதும் பதில் தாக்குதலை மேற்கொள்ளவில்லை. அதற்குரிய சந்தர்ப்பத்தை நாங்கள் எடுத்துக் கொள்ளவும் இல்லை. பொதுமக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவும் இல்லை’ என்று லண்டனில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தொடர்ந்து வாசிக்க…

தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்டன் அலி கப்பல் விடுவிக்கப்படலாம் ‐ கோதபாய ராஜபக்ஷ

கப்டன் அலி என்ற சிறியா நாட்டு கப்பல் விடுவிக்கப்படலாம் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்மீறி பிரவேசித்த காரணத்தினால் கடற்படையினர் குறித்த கப்பலை கைப்பற்றி தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்து உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கும் நோக்கில் இந்தக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசித்ததாக கப்பலின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கப்பலில் பாதுகாப்பு அச்சு தொடர்ந்து வாசிக்க…

நடேசன், புலித்தேவன் சரண் அடைவது தொடர்பாக இலங்கை அரசுடன் விஜய் நம்பியார் பேசியிருக்கிறார்: ஐ.நா. பேச்சாளர் தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் உள்ளிட்டோர் சரணடைவது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் தலைமைச் செயலரான விஜய் நம்பியார் இலங்கையில் இருந்தபோது இலங்கை அரசுடன் பேச்சு நடத்தியிருக்கிறார். இத்தகவலை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூனின் பேச்சாளர் மிச்சேல் மொன்டாஸ் தெரிவித்துள்ளார். விஜய் நம்பியார் இலங்கைக்குச் செல்வதற்கு முன்பாக, சரணடைதல் தொடர் தொடர்ந்து வாசிக்க…

20 வருடங்களின் பின் தாண்டிக்குளம் நோக்கி புறப்பட்ட யாழ்தேவி புகையிரதம்.

யாழ்தேவி ரயில் சேவை 20 வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக  தாண்டிக்குளம் வரை பயணம் செய்யவிருப்பதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதுபற்றி அமைச்சு மேலும் குறிப்பிடுகையில் வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் யாழ்தேவி ரயில் சேவையை யாழ்ப்பாணம் வரை நடத்துவதே அரசாங்கத்தின் குறிக்கோளாகும். இதன் முதற்கட்டமாக வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்குப் போகும் வழியில் முதலாவதாக வரும் தாண்டிக்குளம் ரயில் நிலையம் வரை இன்று யாழ்தேவி ரயில் பயணம் செய்யவுள்ளது. கொழும்பு தொடர்ந்து வாசிக்க…

சமூகங்களுக்கு இடையில் பிரிவினை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிடக் கூடாது ‐ ஜனாதிபதி

சமூகங்களுக்கு இடையில் பிளவை ஏற்பத்தக் கூடிய வகையிலான செய்திகளை அச்சு ஊடகங்களோ அல்லது இலத்திரனியல் ஊடகங்களோ வெளியிடக் கூடாது என அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். கடுயைமான செய்தி வெளியீடுகளின் மூலம் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே ஊடகங்கள் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் செய்திகளை வெளியிட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பிரதம ஆசிரியர்களு தொடர்ந்து வாசிக்க…

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய எந்தவொரு நாட்டுக்கும் சந்தர்ப்பம் இல்லை – அமைச்சர் மஹிந்த சமரசிங்க

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய எந்தவொரு நாட்டுக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாதென மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். போர்குற்ற விசாரணைகள் மற்றும் மனிதஉரிமை கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கான நிறுவமொன்றை இலங்கையில் அமைத்தல் போன்றவற்றக்காக உலக நாடுகள் பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். எனினும் உலக நாடுகளின் இந்த முயற்சிக்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது என அவர் தொடர்ந்து வாசிக்க…

அம்பாறையில் விடுதலைப்புலிகளின் மறைவிடம் மீது விசேட அதிரடிப்படையினர் தாக்குதல்.

அம்பாறை மாவட்டம் குடும்பிக் குளம் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வரும் படை நடவடிக்கைகளின் போது நேற்று மாலை 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புத் தரப்பு தெரிவிக்கின்றது. விடுதலைப் புலிகளின் மறைவிடமொன்றைச் சுற்றி வளைத்த போது அவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் பதில் தாக்குதலிலேயே குறிப்பிட்ட இருவரும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மோதலின் பின்பு அந்தப் பகுதியில் மேற் கொள்ளப்பட்ட தேடுதலின் போது கொல்லப்டப்ட தொடர்ந்து வாசிக்க…

சரியான முறையில் தமிழர் உரிமைகள் வழங்கப்படாத பட்சத்தில் மீண்டுமொரு ஆயுத போராட்டத்தை சந்திக்க நேரிடலாம் – சரத் என்.சில்வா

நீதியில் சிங்கள பௌத்தம் என ஒன்று இல்லை. எல்லா இனமும் சமயமும் ஒன்று தான். நான் இனவாதியாக இருக்கவில்லை.” இளைப்பாறிச் செல்லும் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “தமிழ் மக்களுக்கு, உகந்த நீதி மற்றும் சமூக கட்டமைப்புகள் மூலம், சட்டத்தின் கீழ் உரிய பாதுகாப்பு அளிக்காவிட்டால் தமிழ் மக்களிடையே ஆயுத மோதலுக்குப் பதிலாக மற்றொரு கிளர்ச்சி வெடிக்கும் சாத்தியம் உள்ளது. சரியான முறையில் தமிழர் உரிமைகள் வழங்கப்படாத பட்சத்தில் மீண்டுமொரு ஆயுத போராட்டத்தை தொடர்ந்து வாசிக்க…

 பக்கம் 72 இல் 57  « First  ... « 55  56  57  58  59 » ...  Last »