E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

வாழைச்சேனையில் இளம் குடும்பஸ்தரொருவர் நேற்றிரவு கடத்திச் செல்லப்பட்டுள்ளார் !

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் நேற்றிரவு இளம் குடும்பஸ்தரொருவர் வீட்டில் இருந்த வேளை கறுப்பு நிற பிக் அப் வாகனமொன்றில் வந்தவர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். ஆட்டோ சாரதியான சந்திரேசன் வரதராஜன் ( வயது 38 ) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இப்படி கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என உறவினர்களனால் தெரிவிக்கபடுகின்றது. நேற்றிரவு 9.00 மணியளவில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வீட்டிலிருந்த வேளை குறித்த வாகனத்தில் வந்த நபர்கள் கேட்டைத் திறக்குமா தொடர்ந்து வாசிக்க…

சித்தான்டிப் பிரதேசத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு – பொலிஸ் தகவல்

மட்டக்களப்பு சித்தான்டிப் பிரதேசத்தில் அண்மைக் காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் தகவல்களின் படி ஒரு வார காலத்திற்குள் இரண்டு பாடசாலைகளிலும் ,பிரதேச சபை நூலகத்திலும் இத்தகைய திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளன. நேற்றிரவு நூலக கதவுகளை உடைத்து உள்ளே சென்ற திருடர்களினால் மின் விசிறிகள் ,கதிரைகள் ,தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் உட்பட சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான உடமைகள் கொள்ளை தொடர்ந்து வாசிக்க…

மட்டக்களப்பில் இடம்பெற்ற கொலை தொடர்பில் கைதான T.M.V.Pயினருக்கு விளக்கமறியல் நீடிப்பு !!

கடந்த பதினாலாம் திகதி மட்டக்களப்பு நாகதம்பிரான்வீதி பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் ஐவரையும் எதிர்வரும் பத்தாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் உரிய சாட்சிகள் இல்லையென்பதால் அவர்களை விடுதலை செய்யுமாறு சந்தேகநபர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி தொடர்ந்து வாசிக்க…

அமைச்சர் கருணா அம்மான் அவர்களின் வவுனியா அகதிமுகாமிக்கான விஜயத்தின் போது..(படங்கள் இணைப்பு)

வன்னியில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா இடைத்தங்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) உட்பட அமைச்சர்களான அமீர் அலி , ரீசாட் பதியுதீன் , அமைச்சர் கருணா அம்மான் அவர்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனிபாரதி அவர்களும் மற்றும் கருணா அம்மான் அவர்களின் ஊடகத்துறை செயலாளர் யூலியன் (நியுட்டன்) அவர்களும் அரசாங்க அதிகாரிகளும் சென்று பார்வையிட்டு தொடர்ந்து வாசிக்க…

பிரபாகரனின் பெற்றோர் வவுனியா அகதி முகாம்களில் தங்கியுள்ளனர் – ஜனாதிபதி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெற்றோர் வவுனியா அகதி முகாமொன்றில் தங்கியிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிதாக அமைக்கப்பட்ட அகதி முகாமொன்றில் பிரபாகரனின் பெற்றோரும், ஏனைய விடுதலைப் புலித் தலைவர்களின் உறவினர்களும் தங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபா தொடர்ந்து வாசிக்க…

விடுதலைப் புலிகளின் ஆயுதக் கடத்தல் விவகாரம் தொடர்பில் கடற்படைக்கும், இராணுவத்திற்கும் இடையில் கருத்துவேறுபாடு.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதங்களை கடத்திய விவகாரம் தொடர்பில் கடற்படை பேச்சாளருக்கும், இராணுவப் படைத் தளபதிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. தேசிய தொலைக்காட்சியில் யுத்த வெற்றி தொடர்பில் செவ்விகளை அளித்த இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகள் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் வரையிலும் விடுதலைப் புலிகள் கடல் மார்க்கமாக ஆயுதங்களை கடத்தியிருந்ததாக இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் தேசிய தொலைக்காட்சியில் தொடர்ந்து வாசிக்க…

துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகிய விமலன் பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்புடையவர் ‐ பொலீஸ்

விடுதலைப்புலிகளின் பதுங்குழி ஒன்றில் இருந்து, அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் மற்றுமொரு நபர் காணப்படும் புகைப்படம் ஒன்றை கிளிநொச்சியில் படையினர், கைப்பற்றியிருந்தனர். அந்த புகைப்படத்தில் காணப்படும் நபர் கொழும்பு கொட்டாஞ்சேனையை சேர்ந்த செல்வந்த வர்த்தகர் என தாம் கண்டறிந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். அந்த புகைப்படத்தில் காணப்பட்டவர் பிரபாகரனை போல தோற்றம் கொண்டவராக இருந்ததாகவும் இதனால் பிரபாகரன் போல் தோற்ற தொடர்ந்து வாசிக்க…

தமிழ்ச் செல்வனது குடும்ப உறுப்பினர்கள் அகதி முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் ‐ கருணா அம்மான்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வனின் குடும்ப உறுப்பினர்கள் அகதி முகாமிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமென தேச நிர்மாண அமைச்சர் கருணா அம்மான் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் மெனிக் பாம் அகதி முகாமிற்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது தமிழ்ச் செல்வனது மனைவி மற்றும் பிள்ளைகளை தாம் சந்தித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்ச் செல்வனது குடும்ப உறுப்பினர்கள் எவ்வித பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடாத காரணத்தினால் அவர்கள் தொடர்ந்து வாசிக்க…

பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களின் அனுமதி விண்ணப்பங்கள் ஜூன் 1 முதல்.

அடுத்த வருடம் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் ஜூன்1 முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இது தொடர்பான விசேட அறிக்கையை கல்வி அமைச்சு விடுத்திருக்கிறது. அடுத்த வருடம் முதலாம் தரத்தில் மாணவர்களைச் சேர்ப்பது தொடர்பான சுற்று நிருபம் வெளியிடப்பட்டிருப்பதாக தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் தெரிவித்திருக்கிறார். சர்ச்சையான நிலைமை ஏற்படுவதைத் தவிர்ப் தொடர்ந்து வாசிக்க…

பனாமா ரேடர்ஸ் இலத்திரனியல் வியாபாரநிலைய உரிமையாளர் புலனாய்வுத்துறையினரால் கைது.

சிற்றியில் பனாமா ரேடர்ஸ் எனும் இலத்திரனியல் வியாபாரநிலைய உரிமையாளரான பிரபா என்பவரைத் தாம் கைது செய்துள்ளதாக அரச புலனாய்வுத்துறையினர் State Intelligence Service’s (SIS) தெரிவித்துள்ளனர்.வெள்ளவத்தையைச் சேர்ந்த இவர் அரச படை அதிகாரிகள் சிலருடனும் பாதுகாப்புத் தரப்பினர் சிலருடனும் தொடர்புகளை மேற்கொண்டு தகவல்களைப் பெற்று விடுதலைப் புலிகளுக்கு வழங்கியுள்ளது தெரிய வந்துள்ளதாகவும் அரச புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி கொழும்பிலுள்ள ராஜதந்திரிகளுடன் தொடர்பைக் தொடர்ந்து வாசிக்க…

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியின் செயலாளரை காணவில்லை !

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியின் செயலாளரும் உறவினருமான தவராஜசிங்கம் சுபாஸ் (வயது23) என்பவர் கட்டுநாயக்கா விமான நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை அவர் வீடு திரும்பவில்லை என பாரளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரின் தாயார் வெள்ளவத்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். தவராஜசிங்கம் சுபாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவுக்குச் தொடர்ந்து வாசிக்க…

கஞ்சிக்குடிச்சாறு காட்டுப் பகுதியில் புலிகள் மீது இராணுவத்தினர் தாக்குதல் !

அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு காட்டுப் பகுதியில் இன்று இராணுவ கொமாண்டோ படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையொன்றின் போது 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு தரப்பு கூறுகின்றது. அந்த காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் மறைவிடமொன்று சுற்றி வளைக்கப்பட்ட சமயம் இரு தரப்பினருக்குமிடையில் மோதல்களும் இடம் பெற்றுள்ளன. பாதுகாப்பு தரப்பு தகவல்களின் படி குறிப்பிட்ட 11 சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள அதேவேளை படையினருக்கு எத்தகைய சேதங்களும் தொடர்ந்து வாசிக்க…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாட்டுப்பற்றுள்ள அனைவரின் கட்சி – ஜனாதிபதி

முப்பது வருட காலம் தலைவிரித்தாடிய பயங்கரவாதப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடிந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாட்டுப் பற்றுள்ள அனைவ ரினது கட்சியாக மாறியுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யின் நிறைவேற்றுக் குழு மற்றும் அகில இலங்கை செயற்குழு உறுப்பினர்களுக் கான கூட்டம் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி தொடர்ந்தும் குறிப்பிடுகையில்:- தொடர்ந்து வாசிக்க…

அவசரகாலச் சட்டத்தை தளர்த்துவதற்கு இது உசிதமான தருணமல்ல – நிமால் சிறிபால டி சில்வா

அவசரகால சட்டத்தை தளர்த்துவதற்கு இது உசிதமான தருணமல்ல என சுகாதார அமைச்சரும், அவைத் தலைவருமான நிமால் சிறிபால டி சில்வா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாட்டின் சூழ்நிலை குறித்து எதிர்க்கட்சிகள் சரியாக விளங்கிக் கொண்டுதான் இவ்வாறான கோரிக்கைளை முன்வைக்கின்றனவா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் மூலம் அரசியல் லாபங்களை ஈட்டும் நோக்கில் எதிர்க்கட்சிகள் செயற்படக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்றுமதி வரி குறித்து தொடர்ந்து வாசிக்க…

“பக்தி பாமாலைகள்” ஒளிப்பட இறுவட்டு வெளியீட்டு விழா !

மட்டக்களப்பு களுதாவளைச் சேர்ந்த இசைக்கலைஞர் சந்திரலிங்கம் மகேந்திரனால் பாடப்பட்ட பக்திப் பாமாலைகள் ஒளிப்பட இறுவட்டு வெளியீட்டு விழா எதிர்வரும் 31 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய முன்றலில் இவ்வாலய அறங்காவல் தலைவரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான க.பாஸ்கரன் தலைமையில் இடம்பெறவுள்ளது. களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவ சிஸ்ரீ மு.கு. சச்சிதானந்த குருக்கள் , களுதாவளை திருநீற்றுக்கேணி சிவ சக்தி தொடர்ந்து வாசிக்க…

இரண்டு தரப்பினரும் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டமைக்கான வலுவான சாத்தியங்கள் காணப்படுகின்றன – நவனீதம்பிள்ளை

இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்தக் குற்றச் செயல்களை மேற்கொண்டிருக்கக் கூடிய வலுவான சாத்தியங்கள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளா நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தற்போது நடைபெற்று வரும் அமர்வுகளில் வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுயாதீனமானதும், பக்கசார்பற்றதுமான யுத்தக் குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென தொடர்ந்து வாசிக்க…

அபாயகரமான விளையாட்டை நடத்துகிறது ஐரோப்பா – ஐ.நா. விற்கான இலங்கைத் தூதர்

தமிழர்களுக்கு எதிராக “போர்க்குற்றங்கள்’ புரிந்ததாக கொழும்பு மீது ஐரோப்பா குற்றச்சாட்டு தெரிவித்திருக்கும் நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவான பக்கத்தில் இருக்கின்றன. இன்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பாக விசேட அமர்வொன்று இடம்பெறவுள்ளது. இந்த அமர்வு நாளை புதன்கிழமை வரை நீடிக்கப்படவுள்ளது. ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வாசிக்க…

பிரபாகரன் கொல்லப்படுவதுக்கு பத்மநாதனின் சதியே காரணம் – அமைச்சர் கருணா அம்மான்

விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் கே.பி. என அழைக்கப்படும் பத்மநாதன் சதி செய்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைக் கொலைசெய்திருப்பதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் க விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைக் காப்பாற்றுவதாக இறுதிவரை உறுதிமொழி வழங்கிய கே.பி. இறுதி நேரத்தில் அந்த உறுதிமொழியைக் காப்பாற்றவில்லையென அமைச்சர் கூறினார். “வேண்டுமென்றே கே.பி. அவ்வாறு செய்தார். விடுதலைப் புலிகள் தொடர்ந்து வாசிக்க…

வாழைச்சேனையில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்களைக் காணவில்லை !

வாழைச்சேனை ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக உறவினர்களினால் கல்குடா பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. திருகோணமலையைச் சேர்ந்த சுசீ (24 வயது) நிலக்ஷன் (22 வயது) வாழைச்சேனையைச் சேர்ந்த தீபன் (19 வயது) ரவி (48 வயது), மோகன்ராஜ் (27 வயது) ஆகியோர் தொடர்பாகவே பொலிஸில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 14 ஆம் திகதி ஆழ்கடலில் மீன் பிடித் தொழிலுக்கு இவர்கள் சென்றதாகவும், வழமையாக ஓரிரு வாரங்களின் பின்பு கரைதிரும்பும் இவர்கள் தொடர்ந்து வாசிக்க…

கிழக்கிலுள்ள விடுதலைப் புலிகள் சரணடைப்போவதாக விருப்பம் தெரிவித்துள்ளனர் – கருணா அம்மான்

கிழக்கில் இயங்கி வந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இராணுவத்திடம் சரணடைய விரும்புவதாக தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டதன் பின்னர் பிரதேசத்தில் ஊடுறுவி பல்வேறு தாக்குதல்களை நடத்தி வந்த விடுதலைப் புலி உறுப்பினர்களே இவ்வாறு சரணடையத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு சிறு குழுக்களாக கிழக்கில் ஊடுறுவிய விடுதலைப் புலி தலைவர்கள் தம்மிடம் தொடர்பு கொண்டு சரணடைய விருப்பம் தெரிவித்ததாக தொடர்ந்து வாசிக்க…

 பக்கம் 72 இல் 61  « First  ... « 59  60  61  62  63 » ...  Last »